முந்தய பக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.24 கோடியில் நவீன வசதிகள்

16 May 2026, 10:14 pm
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.24 கோடியில் நவீன வசதிகள்

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.24 கோடியில் நவீன வசதிகள்

சென்னை, மே 16- தாம்பரம் ரயில் நிலையத்தில் அதி கரித்து வரும் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையில், சுமார் ரூ.24 கோடி மதிப்பிலான நவீனமயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நிலை யத்தின் அனைத்து 10 நடைமேடைக ளையும் இணைக்கும் வகையில் 8 மீட்டர் அகல புதிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பழைய மேம்பாலமும் தொடர்ந்து செயல்படு வதால் அலுவலக நேர நெரிசல் கணிச மாகக் குறையும்.

மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக 9 புதிய மின்தூக்கிகள் மற்றும் 10 தானியங்கி படிக்கட்டுகள் அமை க்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன; இதில் 6 மின்தூக்கிகள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன.

இவற்றுடன் புதிய வாகன நிறுத்து மிடம், கூடுதல் கூரைகள் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள் ளப்பட்டு வருவதால், தெற்கு புறநகர்ப் பயணிகள் பெரும் பயனடைவர் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram