தாம்பரம் மாநகராட்சியில் இருசக்கர வாகன ரோந்து சேவை ஆணையர் ஏ. அமல்ராஜ் தொடங்கி வைத்தார்
30 Oct 2026, 11:35 pm

தாம்பரம் மாநகராட்சியில் இருசக்கர வாகன ரோந்து சேவை ஆணையர் ஏ. அமல்ராஜ் தொடங்கி வைத்தார்

சென்னை, அக்.30தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் “ஸ்மார்ட் காக்கி பிட் சிஸ்டம்” என்ற புதிய இருசக்கர வாகன ரோந்துப் பணியை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் வெள்ளியன்று (அக்.30) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சேலையூரை அடுத்த பதுவஞ்சேரி ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற

இந்நிகழ்ச்சியில், நவீன வசதிகளுடன்சீரமைக்கப்பட்ட 73 இருசக்கர ரோந்துவாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்காகப் அர்ப்பணிக்கப்பட்டன. இந்த வாகனங்களில் ரோந்து செல்லும் காவலர்களுக்கு வாக்கி-டாக்கி, உடலில்பொருத்தப்படும் கேமரா மற்றும் எச்சரிக்கை சைரன் ஒலிப்பான்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் ரோந்துப் பணி காவலர்களிடையே உரையாற்றிய ஆணையர் ஏ. அமல்ராஜ் “காவல் துறையின் ஒவ்வொரு செயல்பாடும் அனைத்துஇடங்களிலும் பொதுமக்களால் உற்றுநோக்கப்படுகிறது. எனவே, காவலர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடமையை நேர்மையாகவும், பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் பேசியும் நடந்துகொள்ள வேண்டும். காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு முழு நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் சிறப்பாகச் செயலாற்ற வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.