தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள்மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்ஆணையர் நடத்திய
9 Aug 2026, 12:08 am

தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள்மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்ஆணையர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிக ஒத்திவைப்புசென்னை, ஆக. 8 –தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டத்தை யடுத்து தாம்பரம் மாநக ராட்சி ஆணையர் சங்கத்தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மாதம் 5ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்திசனிக்கிழமையன்று (ஆக.8) 4வது மண்டலஅலுவலகத்தில் தொழி லாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) சார்பில்நடைபெற்ற இந்த போராட்ட த்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நீண்டகாலகோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்திமுழக்கங்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய தலைவர்கள், தொழிலாளர்களின் பிரச்சனை களை முறையிட மாதம் ஒருநாள் நேரம் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ம்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரவிடுப்பு வழங்கவேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், அனைவருக்கும் இஎஸ்ஐஅடையாளஅட்டை வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் இபிஎப் மற்றும் யுஏஎன் கணக்கு எண்கள் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தினர்.சங்கத்தின் தலைவர் ஏ.முருகானந்தம் தலை மையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.சி.முருகேசன், துணைத் தலைவர் கு. ராஜமணி, ஓட்டுநர் ஆனந்தன், இந்திய ஜனநாயக வாலி பர்சங்க முன்னாள் தலைவர் தா.கிருஷ்ணா உள்ளிட் டோர் பேசினர்.

பேச்சுவார்த்தை இதனை தொடர்ந்து சங்கத்தலைவர்களுடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் பேச்சுவார்த்தைநடத்தினார். அதில், மாதம் ஒருநாள் தொழிற்சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். 10ந் தேதிக்குள் ஊதியம்வழங்கப்படும். சுழற்சி முறையில் வாரவிடுப்பு வழங்கப்படும். ஒருநாள் ஊதியமாக 741 ரூபாய் வழங்க அரசுக்குபரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்த பிறகு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்,தொழிலாளர்களுக்கு விரைந்து அடையாள அட்டை வழங்கப்படும், பாதுகாப்பு மற்றும் பணி செய்யும் உபகரணம்தரப்படும். தொழிலாளர் துறை துணை ஆணை யரிடம் நடைபெறும் போனஸ் தொடர்பான வழக்கில் மாநகராட்சிநிர்வாகம் பங்கேற்கும்போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கை இருக்காது, அதிகாரிகளால்தொழிலாளர்களை கண்ணியமாக நடத்தப்படு வார்கள் என்று ஆணையர் உறுதியளித்தார். இத னையடுத்துபோராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சங்கத்தின் பொதுச் செய லாளர் கே.சி.முருகேசன்கூறினார்.