தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் கோரி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

6 Oct 2026, 12:53 am
பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் கோரி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் கோரி தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 5 -பணி நிரந்தரம், குறைந்தபட்ச கூலி வழங்க கோரி திங்களன்று (அக்.5) தாம்பரம் மாநகராட்சி அலுவலக வாயிலில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப்பணி, கழிவுநீரகற்றுதல், ஓட்டுநர், குடிநீர்வழங்குதல் பணியை அவர்லேண்ட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் 1300 பேர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஊழியர் சம்மேளனம் தலைமையில், மாநிலம் முழுவதும்உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம் கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். இதன் ஒருபகுதியாக தாம்பரம் மாநகராட்சியில் அனகாபுத்தூர் மண்டலத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில் தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின்அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியமாக 26ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,தொழிலாளர்களிடம் இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும், மாதந்தோறும் 5ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும், சுழற்சி முறையில் வார விடுப்பு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தபோராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பேசிய தலைவர்கள், “அவர்லேண்ட் நிறுவனம், மாநகராட்சியிடம் ஒரு மெட்ரிக் டன்குப்பை அகற்ற 3ஆயிரத்து 853 ரூபாய் வசூலிக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 450 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற ஒரு நாளைக்கு17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறது.

ஒரு தொழிலாளிக்கு தினக்கூலியாக 1300 ரூபாய் பெறுகிறது. ஆனால், 500 ரூபாய்மட்டுமே தொழிலாளிகளுக்கு வழங்குகிறது. அதற்கான சம்பள ரசீதையும், மாதந்தோறும் குறிப்பிட்டநாளில் அவர்லேண்ட் நிறுவனம் வழங்க மறுக்கிறது. மாநகராட்சி ஆணையர், சிஐடியு சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புக்கொண்டபடி ஊதியம் வழங்க உரிய நாளில் ஊதியம் வழங்க மறுக்கின்றனர்.

எனவே, ஒப்பந்த தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாம் நிரந்தரம் செய்து நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றனர்.சங்கத்தின் தலைவர் ஏ.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஜி.விஜயலட்சுமி எம்.சி., சிஐடியுதென்சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செந்தில்குமார், சிஐடியு தலைவர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அப்பனு, ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்கே.சி.முருகேசன், பொருளாளர் இ.குழந்தைசாமி, நிர்வாகிகள் கு.ராஜன்மணி, சிபிஎம் தாம்பரம் பகுதிச்செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.