சென்னை விரைவு செய்திகள்
3 Jan 2026, 4:57 pm

விதிமுறை மீறல்: ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம்

விழுப்புரம், ஜன. 3- விழுப்புரம் அருகே விதிமுறை மீறலில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவரான செல்வம், வார்டு உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி ஊராட்சி ஆவணங்களில் திருத்தம் செய்து விதிமீறலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து, தமிழக ஊராட்சிகள் சட்டத்தின்படி அவரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டார். இதற்கான அரசாணை கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட செல்வம், ஊராட்சி ஆவணங்களைத் துணைத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது ஊராட்சித் தலைவரின் பொறுப்புகள் துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், காசோலை மற்றும் இணையவழி ஒப்புதல்களுக்கு வட்டார வளர்ச்சி அலு

குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை

விழுப்புரம், ஜன. 3- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில், குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்திப் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் விவசாய வேலை முடித்து வீடு திரும்பிய பெண்களிடம், தையூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (23) என்ற வாலிபர் போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் போலீசாரையும் தாக்க முயன்ற அவரை, போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அச்சமடைந்த கிராம மக்கள், குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதாகக் கூறி கடையை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் அரிகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர் துரைச்செல்வன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்றத் தீர்ப்பின்படி அந்தத் டாஸ்மாக் கடையை மூடுவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை விற்ற 6 பேர் கைது

ராணிப்பேட்டை, ஜன.3- ராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன தணிக்கையின்போது, போதைக்காக சட்டவிரோதமாக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற 6 வாலிபர்களைக் கைது செய்தனர். ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடமிருந்து 300 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராஜசேகர், சஞ்சய் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களைச் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த முதல்வரும் மு.க.ஸ்டாலின்தான்! கருத்துக் கணிப்பு தகவல்

சென்னை, ஜன.3 - தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பான இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி களிலும் 81,375 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், 2026 தேர்த லில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வாய்ப்பு ள்ளதா என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் ஆம் என்றும், 29 சதவீதம் பேர் இல்லை என்றும், 16 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரண்டாம் இடத்தையும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். புதிய இளம் வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் குறித்த கணிப்பில் விஜய்க்கு முதலிடமும், உதயநிதிக்கு மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது. கட்சி வாரியான ஆதரவு பட்டியலில் திமுக 17.07 சதவீதத்துடன் முதலிடத்திலும், அதிமுக 15.03 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், தமிழக வெற்றிக் கழகம் 14.20 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.'

மாநில கல்வி உரிமையை நசுக்கும் மசோதா: அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்

சென்னை, ஜன,3- சமூகப் புரட்சியாளர் சாவித்திரிபாய் பூலேயின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியக் கல்வியின் எதிர்காலத்தைக் காக்க முன்வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒரு மிக முக்கியமான அறைகூவலை விடுத்துள்ளது. மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள ‘விட்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான்’ (விபிஎஸ்ஏ) மசோதா 2025, மாநில அரசுகளின் கல்வி அதிகாரத்தை முழுமையாகப் பறிப்பதோடு, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி வாய்ப்புகளை அடியோடு சிதைக்கும் நோக்கம் கொண்டது என்று அந்த அமைப்பு எச்சரிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வராத ஒரு விஷயத்தை விவாதத்திற்கு எடுப்பதே அரசியலமைப்புச் சட்டத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அரசு நிதியுதவி பெறும் உயர்கல்வி நிறு வனங்கள் அனைத்தும் முற்றிலுமாகத் தனியார்மயமாக்கப்பட்டு சுயநிதி நிறு வனங்களாக மாற்றப்படும். இதன் விளை வாகக் கல்வி என்பது ஒரு வணிகப் பொருளாக மாறி, பன்னாட்டு மற்றும் தனி யார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு வழிவகுக்கும். ஏழை மாணவர்கள் தங்களின் உயர்கல்விக்காகச் சந்தை சக்திகளின் கருணையை எதிர்பார்க்கும் அவல நிலை ஏற்படும். மேலும், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களின் சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்பட்டு, ஒவ்வொரு கல்வி நடவடிக்கையும் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பு வளை யத்திற்குள் கொண்டுவரப்படும். இது கல்வியியல் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைத்து ஒருமுனை அதிகாரத்திற்கு வழிவகுக்கும். ஜோதிராவ் பூலே அன்று குறிப்பிட்டது போல, கல்வி இல்லை யெனில் ஒடுக்கப்பட்ட மக்கள் பேரழிவைச் சந்திப்பார்கள். மத்திய அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து விலகிக்கொண்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கதவைத் திறந்துவிடுவது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, இந்தியாவின் ஜன நாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்க, இந்த ஆபத்தான மசோதாவை நாடாளுமன்றத்திலோ அல்லது கூட்டு நாடாளுமன்றக் குழுவிலோ (JPC) விவா தத்திற்கு அனுமதிக்கக் கூடாது எனத் தமிழகப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வலியுறுத்தியுள்ளார்.

அந்தியோதயா ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு: பெண் பயணி காயம்

நாகர்கோவில், ஜன.3- நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கிச் சென்ற அந்தியோதயா விரைவு ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் பெண் பயணி ஒருவர் காயமடைந்தார். நேற்று நாகர்கோவில் சந்திப்பிலிருந்து ரயில் புறப்பட்டு, ஆரல்வாய்மொழி அருகே சென்று கொண்டி ருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. மர்ம நபர்கள் வீசிய கல் 5-வது பெட்டியின் ஜன்னல் கண்ணாடியைத் தகர்த்து உள்ளே விழுந்தது. இதில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ரீனா அன்னமேரி (67) என்பவரது தலை மற்றும் முகத்தில் கண்ணாடித் துகள்கள் பட்டு காயம் ஏற்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்ததும், ரயில் நெல்லை சந்திப்பை அடைந்த போது அங்குத் தயாராக இருந்த மருத்துவக் குழு வினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த னர். மேல் சிகிச்சைக்கு மறுப்புத் தெரிவித்த அவர், சென்னைக்குத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்தத் தாக்குதல் காரணமாக ரயில் 10 நிமி டங்கள் தாமதமாகப் புறப்பட்டது. இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆரல்வாய்மொழி பகுதி யில் கல் வீசிய கும்பலைத் தீவிரமாகத் தேடி வரு கின்றனர். ரயில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தவெக-வுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி: காங்கிரஸ் கட்சி விளக்கம்

சென்னை, ஜன.3 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலை யில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டு, தற்போது சீரான முறையில் முன்னேறி வருகிறது என்றனர். நாங்கள் இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். த.வெ.க-வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் செய்தி வதந்தி என்றும் தெரிவித்தனர். ஜோதிமணி கூறிய புகார் தொடர்பாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கள் சதீஷ்குமார், செந்தில்குமார் ஆகி யோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சனை களை நிர்வாகிகள் பொதுத் தளத்தில் பகிர வேண்டாம். மேலும் ஜோதிமணி புகாரை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.