தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

8 Jan 2026, 2:44 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

அன்புமணியுடன் கூட்டணி பேசியது  நீதிமன்ற அவமதிப்பு: ராமதாஸ் திண்டிவனம்

, ஜன.8 - அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்ற அவ மதிப்பு, என் தலைமையில்தான் கூட்டணி பற்றி பேச முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்புமணி கட்சியில் அடிப்படை உறுப்பினரி லிருந்து நீக்கப்பட்டவர். அவர் எந்த அரசியல் கட்சியு டனும் தேர்தல் கூட்டணி குறித்து பேசினால் அது செல்லாது. அது கட்சியின் விதிகளுக்கு முரணானது. மேலும் புதுதில்லி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அவமதிப்பதாகும் என்றார். கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் கூட்டணி குறித்து ஒரு சில தினங்களில் அறி விக்கப்படும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி என்னிடம் தேர்தல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றார் மருத்துவர் ராமதாஸ்.  பேட்டியின்போது பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி  ராமதாஸ், கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, பாமக சட்ட  ஆலோசகர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

புகார் மனுவில் பிழைகள்:  திருப்பி அனுப்பிய நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான முறைகேடு வழக்கை பிழைகளுடன் நீதிமன்ற விசார ணைக்கு பட்டியலிட முடியாது என அதிமுக எம்.பி., இன்பதுரை தாக்கல் செய்த மனுவை நீதிமன்ற பதிவுத்  துறை திரும்பி அனுப்பியுள்ளது.  கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  அளித்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத தால், வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தர விடக் கோரி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் பல்வேறு  பிழைகள் இருப்பதால் விசாரணைக்கு பட்டியலிட முடி யாது என்றும், பிழைகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்தால் பட்டியலிடப்படும் என்றும் நீதிமன்ற பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது முதல்வர் பெருமிதம்

சென்னை, ஜன.8 -  சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள  வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடை பெறும் ‘யூமேஜின்டிஎன் 2026’ தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு ஜன.8 அன்று தொடங்கி, ஜன.9 அன்றும் நடைபெறுகிறது. மாநாட்டை தொடங்கி வைத்த முதல மைச்சர் ஸ்டாலினுக்கு மனித ரோபோ கை கொடுத்து வரவேற்பு தெரிவித்தது. முதல மைச்சர் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டில் உரையாற்றிய முதலமைச் சர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த மாநாட்டை தொடங்கினோம், தற்போது  இந்த மாநாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது  பெருமையாக உள்ளது. மற்ற மாநிலங்களை  விட தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தொழில்நுட்பத் துறையில் நாம் இந்த நிலையில் இருப்ப தற்கு காரணம் கலைஞர். உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு  மாறி வருகிறது என தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு  முன்னாள் அமைச்சர் பாராட்டு

சென்னை, ஜன.8- உலகத்திலேயே படிக்கும் மாண வர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு தெரி வித்துள்ளார். மாண வர்கள் கல்வியில் உயர  இன்றைய அரசு உதவிக் கரமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட் டார். நாங்கள் படிக் கும்போது நோட்டு, புத்தகத்தை எல்லாம் நாங்கள்தான் வாங்க  வேண்டும். தற்போ உதுள்ள மாண வர்களுக்கு இலவசமாக சைக்கிள், பஸ் பாஸ், புத்தகம் போன்றவற்றை அரசே வழங்குகிறது. காலில் அணியும் காலணி முதல் கணினி வரை அரசே வழங்கி மாணவர்களைப் படிக்க  வைக்கிறது என கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்தனர்

சென்னை, ஜன.8 - அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். பழனி தொகுதி முன் னாள் எம்எல்ஏ சுப்பு ரத்தினம், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ பால கங்காதரன் ஆகியோர்  திமுகவில் இணைந்த னர். சுப்புரத்தினம், பாலகங்காதரன் இரு வரும் 1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

முட்டை விலை குறைவு

நாமக்கல், ஜன.8- நாமக்கல்லில் முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலை இருபது காசு கள் குறைந்து ரூ.5.60  நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரூ.6.40 வரை உச்சம் தொட்ட முட்டை விலை கடந்த நான்கு நாட்களில் 80 காசுகள் குறைந்துள்ளது. முட்டை யின் நுகர்வும் விற்பனை யும் சரிந்ததால் பிற மண்டலங்களிலும் முட்டை  விலை குறைந்து வரு கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.