உள்ளூர் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்திடுக! இராமேஸ்வரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
28 Dec 2025, 5:05 pm
<p><strong>உள்ளூர் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்திடுக! இராமேஸ்வரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இராமநாதபுரம், டிச.28- இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் உள்ள திருக் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் எவ் வித சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யும், திருக்கோவிலில் தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியில் ஈடு பட்டு வரும் யாத்திரை பணியாளர் களுக்கான கூலியை நிறுத்தி வைக்காமல் உடனடியாக வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கோரி யும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திருக்கோவிலின் மூன்றாம் பிர காரத்தில் (வடக்கு பகுதி) பாரம்பரி யமாக நடைபெற்று வந்த பூஜை யை நிறுத்தியுள்ளதை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண் டும் என்பதையும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் திராவிட வெற்றிக்கழகத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் கராத்தே எம். பழனிச்சாமி தலை மையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணா கரன், தாலுகா செயலாளர் ஜி. சிவா, மாவட்டக்குழு உறுப்பினர் இ.ஜஸ்டின், தாலுகா குழு உறுப்பி னர்கள் ஏ.அசோக், ஏ.ஜேம்ஸ் ஜஸ்டின், ஏ.ஞானசேகர், டி.மாரி முத்து, என்.மாரி மற்றும் வாலிபர் சங்க தாலுகா செயலாளர் க. கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் நகர் தலைவர் ஜே.ராஜிவ்காந்தி, மதிமுக நகர் செயலாளர் ஜி. வெள்ளைச்சாமி, சிபிஐ நகர் செய லாளர் சி.ஆர்.செந்தில்வேல், சிபிஐ (எம்எல்) நகர் செயலாளர் கே.முரு கானந்தம், மனிதநேய மக்கள் கட்சி யின் நகர் தலைவர் செய்யது இப்ரா கிம்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.</p>
