தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்எஸ்எஸ் சாகா நடத்திய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திடுக!

30 Dec 2025, 4:07 pm
ஆர்எஸ்எஸ் சாகா நடத்திய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திடுக!
<p><strong>ஆர்எஸ்எஸ் சாகா நடத்திய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திடுக!</strong></p> <p>மதுரை, டிச.30- மதவெறி அமைப்பான ஆர்எஸ்எஸ் சாகா பயிற்சி நடத்தப்பட்ட தனியார் பள்ளி &nbsp;நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந் &nbsp;திய மாணவர் சங்கம் மற்றும் &nbsp;இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். &nbsp;இதுதொடர்பாக, மாவட்ட &nbsp;முதன்மை கல்வி அலுவல ரிடம் புகார் மனு ஒன்றை &nbsp;அளித்துள்ளனர். அந்த மனு வில் கூறப்பட்டிருப்பதாவது: திருப்பாலை கிராமத் தில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி &nbsp;யாதவ் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில், கடந்த &nbsp;சனிக்கிழமை (டிச. 27) அன்று &nbsp;ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடத்தப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு இந்திய ஒன்றிய அரசாங் கத்தினால் பலமுறை தடை &nbsp;செய்யப்பட்ட அமைப்பா கும். அரசியலையும், மத &nbsp;ஒற்றுமையையும் சீர்குலைக் கும் அமைப்பாகும். மத &nbsp;நல்லிணக்கத்திற்கு இடை யூறாகவும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரி வளாகங்க ளில் பயிற்சி நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக, சாகா நடத்து வதற்கு துணைபோன ஸ்ரீராம் &nbsp;நல்லமணி யாதவ் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வா கத்தின் மீதும் தலைமை ஆசி ரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற பயிற்சி மதுரை மாவட்டத்தில் எந்த கல்வி &nbsp;வளாகத்திலும் நடைபெறா மல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சுற்ற றிக்கை அனுப்ப வேண்டும். மக்கள் ஒற்றுமையைப் பாது காக்க அரசு உதவ வேண் டும். இவ்வாறு மனுவில் குறிப் &nbsp;பிடப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கத் &nbsp;தின் (SFI) மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சுதர்சன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை &nbsp;மாநகர் மாவட்டச் செயலா ளர் வேல்தேவா மற்றும் புற நகர் மாவட்டச் செயலாளர் தமிழரசன் மாநில துணைச் செயலாளர் அக்ஷயா, மாநி லக்குழு உறுப்பினர் சுபா ஷினி உள்ளிட்டோர் மனுவை &nbsp;அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.