தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் மோசமான செயல்பாட்டால் இந்தியாவிற்கு பலத்த அடி உலகின் 5ஆவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்த தைவான்

30 May 2026, 9:01 pm
மோடி அரசின் மோசமான செயல்பாட்டால் இந்தியாவிற்கு பலத்த அடி உலகின் 5ஆவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்த தைவான்

மோடி அரசின் மோசமான செயல்பாட்டால் இந்தியாவிற்கு பலத்த அடி உலகின் 5ஆவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்த தைவான்

மும்பை உலகளாவிய பங்குச் சந்தை முதலீட்டு மதிப் பில் (Market Capitalization) இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி சீனாவின் ஒரு பகு தியான தைவான், உலகின் 5ஆவது மிகப்பெரிய பங்குச் சந்தையாக உருவெடுத்து புதிய வரலாறு படைத்துள் ளது.

தைவானின் மொத்த பங்குச் சந்தை மதிப்பு 4.95 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை (470 லட்சம் கோடி) எட்டியுள்ளது

. இதன் மூலம், 4.92 டிரில்லியன் அமெ ரிக்க டாலர் (ரூ. 467 லட்சம் கோடி) மதிப்புடன் 5ஆவது இடத்தில் இருந்த இந்தி யாவை தைவான் 6ஆவது இடத்திற்குத் தள்ளியுள்ளது.

செமிகண்டக்டர், தொழில் நுட்பத் துறையில் தைவான் நிறுவனங்களின் அசுர வளர் ச்சியே தைவானின் இந்த வர லாற்றுச் சிறப்புமிக்க முன்னே ற்றத்திற்குக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

உலகளாவிய பங்குச் சந்தை முதலீட்டு மதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா வும் (77.95 டிரில்லியன் அமெ ரிக்க டாலர்), சீனா (15.61 டிரில் லியன் அமெரிக்க டாலர்) 2 ஆவது இடத்திலும், ஜப்பான் (8.70 டிரில்லியன் அமெ ரிக்க டாலர்) 3ஆவது இடத்தி லும், ஹாங்காங் (7.25 டிரில் லியன் அமெரிக்க டாலர்) 4ஆவது இடத்திலும் உள் ளது.

7ஆவது இடத்தில் தென் கொரியாவும் (4.54 டிரில்லி யன் அமெரிக்க டாலர்), 8 ஆவது இடத்தில் கனடாவும் (4.54 டிரில்லியன் அமெரிக்க டாலர்), 9ஆவது இடத்தில் இங்கிலாந்தும் (3.99 டிரில் லியன் அமெரிக்க டாலர்), 10ஆவது இடத்தில் பிரான் ஸும் (3.50 டிரில்லியன் அமெ ரிக்க டாலர்) உள்ளன. இந்தியாவிற்கும் தைவா னுக்கும் இடையே வெறும் 0.03 டிரில்லியன் டாலர் மட்டுமே வித்தியாசம் என்றா லும், அது ரூ.3 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.