ரூ.7000 லஞ்சம் : தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம்
28 May 2026, 10:08 pm

ரூ.7000 லஞ்சம் : தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம்

தென்காசி, மே 28- தென்காசி மாவட்டம், செங்கோட்டை யில் 2013 ஆம் ஆண்டு ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளரிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு கள் சிறை தண்டனையும் ரூ. 7000 அப ராதமும் விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட் டையைச் சேர்ந்த செண்பகராஜ் என்பவர்.

2013 ஆம் ஆண்டு புளியரை எஸ்.வளைவு அருகில் தான் நடத்தும் ஹாலோ பிளாக் தயார் செய்யும் கம்பெனிக்கு, அரை இன்ஞ் மற்றும் கால் இன்ச் ஜல்லி கற்களை லாரி யில் எடுத்து செல்ல அனுமதி கேட்டு அப் போதைய செங்கோட்டை தாசில்தாரான ஸ்டெல்லா எஸ்தர் ராணியிடம் மனு கொடுத்துள்ளார்.

தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணி மனுதாரரிடம் ஜல்லி கற்களை லாரியில் கொண்டு செல்ல அனுமதி வழங்க ரூ.7000/ லஞ்சமாக கேட்டுள்ளார்.

எனவே செண்பக ராஜ் அப்போதைய திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் மனுக் கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து பொறி வைப்பு நடவடிக்கையை 26.11.2013 ஆம் தேதி மேற்கொண்ட போது ரசாயனம் தடவிய ரூ.7000/ரூபாயை மனுதாரரிடமிருந்து பெற்றபோது கையும் களவுமாக அப்போதைய செங்கோட்டை தாசில்தார் ஸ்டெல்லா எஸ்தர் ராணி பிடிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது.

தற்போது விசாரணை முடித்து 26.05.2026 ஆம் தேதி எதிரிக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின்படி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 20,000/அபராதமும் விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி இராஜ வேல் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞராக ஜென்சி என்பவர் ஆஜரானார். மேலும் அரசு ஊழி யர்கள் எவரேனும் லஞ்சம் கேட்டால் தென் காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளிக்கலாம். என்றும் தெரிவித்தார்.