டாஃபே நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளி தீக்குளிப்பு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சிஐடியு வலியுறுத்தல்
14 Jun 2026, 11:39 pm
<p><strong>டாஃபே நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளி தீக்குளிப்பு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 14- திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே செயல்பட்டு வரும் டாஃபே டிராக்டர் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளி ஒருவர் தீக் குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம் பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. கடுமை யான தீக்காயங்களுடன் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலை வர் சி.பாலச்சந்திரபோஸ் மற்றும் மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கொடைரோடு அருகே திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந் துள்ள டாஃபே டிராக்டர் தொழிற்சாலை, இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு தினசரி சுமார் 250 டிராக்டர்கள் உற்பத்தி செய்யப் பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடுமையான வேலைப்பளு மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சிஐடியு குற்றம் சாட்டியுள்ளது. தொழிற்சாலையில் 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலை யில், 300-க்கும் மேற்பட்டோர் பல ஆண்டு களாக பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், ஒரே பணியை மேற்கொள் ளும் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படாமல், ஊதியத்தில் ஏற்றத் தாழ்வுகள் கடைப்பிடிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழிற்சாலையின் முக்கிய பிரிவான லோடிங் மற்றும் அன்லோடிங் பணி களில் சுமார் 60 தொழிலாளர்கள் 15 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றி வருவதாக வும், அவர்களும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்றும் சிஐடியு தெரி வித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய ஊதியம், பல நேரங்களில் தாமதமாகவும், தவணைகளாக வும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழி லாளர்கள் பலமுறை முறையிட்டும் நிர்வா கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், விளாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்ற தொழிலாளி, ஊதி யம் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்ச லின் காரணமாக ஜூன் 13 அன்று தொழிற் சாலை முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிஐடியு தெரி வித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, கார்த் திக்கை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தாக கூறப்படும் நிர்வாகம் மற்றும் சம்பந் தப்பட்ட அதிகாரிகள் மீது காவல்துறை உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர் நலத்துறை மற்றும் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கார்த்திக்கின் மருத்து வச் செலவுகளை முழுமையாக டாஃபே நிர்வாகமே ஏற்க வேண்டும், மேலும் அவ ருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சிஐடியு மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித் துள்ளனர்.</p>
