முந்தய பக்கம்

மாணவர்களுக்கான டேக்வாண்டோ போட்டிகள்: 330 பேர் பங்கேற்பு

27 Nov 2025, 3:11 pm
மாணவர்களுக்கான டேக்வாண்டோ போட்டிகள்: 330 பேர் பங்கேற்பு
<p>மாணவர்களுக்கான டேக்வாண்டோ போட்டிகள்: 330 பேர் பங்கேற்பு திருப்பூர், நவ.27- திருப்பூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான டேக் வாண்டோ போட்டிகளில் 330 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருப் பூர் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி கள் வியாழனன்று நடைபெற்றது. திருப்பூர் கல்லூரி சாலை யில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய &nbsp;உள்விளையாட்டு அரங்கத்தில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட் பட்ட மாணாவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இந்த &nbsp;போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 330 மாணவர்கள் &nbsp;பங்கு பெற்றனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு குமார் தலைமையில் நடைபெற்ற &nbsp;போட்டி களை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி &nbsp;உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயபால் சிறப்பு &nbsp;விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் வரவேற் றார். இப்போட்டிகளில் அந்தந்த எடைப் பிரிவுகளில் முதலிடம் &nbsp;பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளுக்கு &nbsp;தகுதி பெறுகின்றனர். அந்த வகையில் மாணவியர்களுக் கான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற உள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram