முந்தய பக்கம்

விழுப்புரத்தில் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ததீஒமு ஆர்ப்பாட்டம்

9 Feb 2026, 3:02 pm
விழுப்புரத்தில் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ததீஒமு ஆர்ப்பாட்டம்
<p><strong>விழுப்புரத்தில் ஆணவப் படுகொலையைக் கண்டித்து ததீஒமு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>விழுப்புரம், பிப்.9- &nbsp;ஆணவப் படுகொலையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். முத்துகுமரன் தலைமை தாங்கினார். &nbsp;ஆர்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் &nbsp; சுகந்தி, மாநில துணை செயலாளர் வாஞ்சிநாதன், மக்கள் அதிகார &nbsp; அமைப்பு பாலு, கடலூர் மாவட்ட மாதர் சங்க வழக்கறிஞர் மேரி, &nbsp; விழுப்புரம் மாவட்ட செயலாளர் இலக்கியா, சிஐடியு மாவட்ட &nbsp; செயலாளர் ஆர்.மூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட &nbsp; செயலாளர் ஆர்டி.முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். &nbsp;பண்ருட்டி அருகே அழகப்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் தேவஜெசிபிரியா, விழுப்புரம் மாவட்டம் சொர்ணா வூர் மேல்பாதியைச் சேர்ந்த வசந்தராஜ் என்ப வரைக் காதல் திருமணம் செய்திருந்தார். இந்நிலை யில், வரதட்சணை கேட்டும் சாதிப் பெயரைக் கூறியும் வன்கொடுமை இழைத்து, கடந்த ஜனவரி 31 அன்று தேவஜெசிபிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram