விளையாட்டு
21 Feb 2026, 3:26 pm

விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 சுற்று : வெற்றியோடு துவங்குமா இந்தியா?

10ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொட ரின் லீக் ஆட்டங்கள் வெள்ளியன்று நிறைவு பெற்றன. தொடர்ந்து “சூப்பர் 8” சுற்று ஆட்டங்கள் சனியன்று தொடங்கின. இந்நிலையில், இந்த சூப்பர் 8 சுற்றின் 3ஆவது ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு நாடுகளும் வெற்றியோடு சூப்பர் 8 சுற்றை துவங்கும் நோக்கத்தில் கள மிறங்குகிறது. மேலும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா பலம் வாய்ந்த அணிகள் என்ற நிலையில், இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

இங்கிலாந்து - இலங்கை இடம் : கொழும்பு, இலங்கை நேரம் : மதியம் 3 மணி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடம் : அகமதாபாத், குஜராத் நேரம் : இரவு 7 மணி

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

விளையாட்டு உலகில் நட்சத்திரமாக ஜொலித்த ஜிம்பாப்வே

கிரிக்கெட் உலகில் இரண்டாம் நிலை அணியாக இருப்பது ஜிம்பாப்வே ஆகும். அடிக் கடி உலகக்கோப்பை போட்டிகளில் நட்சத்திர அணிகளுக்கு அதிர்ச்சி தோல்வி அளிக்கும் அணிகளில் ஒன்று. அதுவும் ஒரு போட்டியில் மட்டும். ஆனால் தற்போது நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் முன்னெப்போதும் இல் லாத வகையில் லீக் சுற்றில் ஆஸ்தி ரேலியா, இலங்கை உள்ளிட்ட சாம்பி யன் அணிகளை வீழ்த்தி தோல்வியை சந்திக்காமல் (மழையால் ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது - அயர்லா ந்து) ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறி யது. அதுவும் முதலிட அந்தஸ்து டன். ஜிம்பாப்வே அணியின் அசத்த லான செயல்பாட்டால், முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேறியுள்ளது. இதனால் ஜிம் பாப்வே அணியை கிரிக்கெட் உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த விளை யாட்டு உலகமே கொண்டாடி வருகிறது. குறிப்பாக உலகின் முன்னணி விளையாட்டுச் செய்தி நாளிதழ்கள் ஜிம்பாப்வே அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முதல் பக்கத்தில் பிரம்மாண்ட படங்களு டன் செய்தி வெளியிட்டு, அங்கீகா ரத்துடன் பாராட்டு தெரிவித்துள்ளன. இதனால் விளையாட்டு உலகில் ஜிம்பாப்வே ஆடவர் கிரிக்கெட் அணி நட்சத்திரமாக ஜொலித்துள் ளது.

குளிர்கால ஒலிம்பிக்கில் ஐரோப்பா

ஆதிக்கம் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கம் போல பதக்கப்பட்டியலில் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முதல் 10 இடங்களில் 8 இடங்கள் ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் (நார்வே, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, சுவீடன்) என்ற நிலையில், அமெரிக்கா (வட அமெரிக்கா), ஜப்பான் (ஆசியா) ஆகிய 2 நாடுகள் மட்டுமே வேறு கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் ஆகும். அதே போல மொத்தப் பட்டியலில் (28 இடங்கள்) 19 நாடுகள் ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பி டத்தக்கது.

பாகிஸ்தான் வீரர்கள் இல்லையென்றால் அவமானம்

இங்கிலாந்து நாட்டின் ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இல்லையென்றால் அது அவமானமாக கருதப்படும் என இங்கிலாந்து அணியின் டி-20 கேப்டன் ஹாரி ப்ரூக் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஏலம் தொடர்பானது எங்களுடைய வேலை அல்ல. எனினும், நான் என்ன சொல்கிறேன் என்றால், கடந்த சில வரு டங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் நாடாக இருந்து வருகிறது. 50 முதல் 60 வீரர்கள் விளையாடுவதற்கான ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிப்பார்கள். அவர்களை ‘தி ஹண்ட்ரட்’ லீக் தொடரில் பார்க்க முடியவில்லை என்றால் அது அவமானம்” என அவர் தெரிவித்துள்ளார்.