தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

20 Feb 2026, 2:39 pm
விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் “சூப்பர் 8” சுற்று ஆட்டங்கள் இன்று தொடக்கம்

இந்தியா, இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் வெள்ளியன்று நிறைவு  பெற்றன. தொடர்ந்து “சூப்பர் 8” சுற்று ஆட்டங்கள் சனியன்று தொடங்குகின்றன. இது நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் கிடையாது. லீக் போன்று ஒரு வகை சுற்று ஆகும். இந்நிலையில், மார்ச் 1 வரை நடை பெறும் இந்த சூப்பர் 8 சுற்றில், பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் (ஒரு பிரிவில் 4 அணிகள்) பிரிக்கப்பட்டுள்ளன.  சூப்பர் 8 சுற்று  ஆட்டங்களில் ஒவ்வொரு பிரிவிலும், தங்களது பிரிவின் மற்ற 3 அணிகளுடன் ஒரு முறை மோதும். இந்த சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப்பிடிக்கும் (4 அணிகள்) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி - இறுதி அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 4 (கொல்கத்தா) மற்றும் மார்ச் 5 (மும்பை) ஆகிய தேதிகளிலும் (ஒருவேளை பாகிஸ்தான் அணி அரை யிறுதிக்குத் தகுதி பெற்றால் கொழும்பு), இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்திலும் நடை பெற உள்ளது.  இத்தகைய சூழலில், சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்து - பாகிஸ்தான் மோதுகின்றன.  இந்த ஆட்டம் சனியன்று இலங்கை நாட்டின் கொழும்புவில் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு நடை பெற உள்ளது.

இந்திய அணி சென்னையில் விளையாடுகிறது

லீக் போட்டியில் இந்திய அணி சென்னை மண்ணில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. இத்தகைய சூழலில், இந்தியா - ஜிம்பாப்வே மோதும் சூப்பர் 8 சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்., 26ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்திய அணியின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள்

பிப்., 22 இந்தியா - தென் ஆப்பிரிக்கா (அகமதாபாத் - குஜராத்)  பிப்., 26 இந்தியா - ஜிம்பாப்வே (சென்னை - தமிழ்நாடு) மார்ச் 1 இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் (கொல்கத்தா - மேற்கு வங்கம்)

குரூப் - 1

இந்தியா தென் ஆப்பிரிக்கா மேற்கு இந்தியத் தீவுகள் ஜிம்பாப்வே

குரூப் - 2

பாகிஸ்தான் இலங்கை இங்கிலாந்து நியூஸிலாந்து

குளிர்கால ஒலிம்பிக் - 2026 பதக்கப் பட்டியல்

நாடுகள்        தங்கம்       வெள்ளி      வெண்கலம்      மொத்தம்

1.                              நார்வே                  16    8    10    34

2.                             அமெரிக்கா          9    12    6    27

3.                             இத்தாலி                 9    5    12    26

4.                             பிரான்ஸ்                6    8    5    19

5.                             நெதர்லாந்து         6    7    3    16

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.