தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன் வேட்புமனுத் தாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன் வேட்புமனுத் தாக்கல்</strong></p>
<p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தளி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.ராமச்சந்திரன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் ஓசூர் எம்எல்ஏ-வுமான ஒய்.பிரகாஷ், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர், கெலமங்கலம் மற்றும் தளி ஒன்றியச் செயலாளர்கள் ராஜா, நடராஜன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.</p>
