நெல்லையில் டி.காமராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா
1 Jun 2026, 10:40 pm
<p><strong>நெல்லையில் டி.காமராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா</strong></p><p>திருநெல்வேலி,ஜூன் 1- பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து இடைக்கமிட்டி செயலா ளரும் சிஐடியு அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர் சங்க மண்டல தலைவரு மான டி.காமராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா ஞாயிறன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தின் பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கி னார். ரேவா மாநில துணைச் செயலாளர் பெருமாள் வர வேற்றார். மார்க்ஸிய எழுத்தாளர் வீ. பழனி, சிபி எம் மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம், மாநில குழு உறுப்பி னர் கே.ஜி. பாஸ்கரன், காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் செ. முத்துக்குமாரசாமி, சிஐடியு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரசல், சிபிஎம் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் ஆர்.மதுபால் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மோகன், மாவட்ட செயலாளர் எல். சரவணபெருமாள், தூத்துக் குடி மாவட்ட தலைவர் பேச்சி முத்து, தென்காசி மாவட்ட செயலாளர் மணிகண்டன் , நெல்லை மாவட்ட தலைவர் ஆர்.முருகன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட செயலாளர் டி.கந்தசாமி, அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழி யர் சங்க ரேவா வெங்கடாச லம், சிஐடியு நாகர்கோவில் பொதுச் செயலாளர் சுரேஷ், ரேவா மூத்த தலைவர் சுப்பிர மணியன், அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சங்க துணைப் பொதுச் செயலா ளர் அருண், ரேவா விருது நகர் தலைவர் வேலுச்சாமி, திருநெல்வேலி தலைவர் தங்கதுரை, நாகர்கோவில் பொதுச் செயலாளர் சுந்தர் ராஜ், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் மரிய ஜான்ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் ஆர்.கரு மலையான் கலந்து கொண்டு பேசினார், பணி ஓய்வு பாராட்டு விழாவில் நொய்டா வில் போராடும் தொழிலா ளர்களுக்காக ரூ.1000 நிதியை காமராஜ் வழங்கி ஏற்புரையாற்றினார். டிஎன் எஸ்டிசி சிஐடியு பொரு ளாளர் சங்கிலி பூதத்தான் நன்றி கூறினார்.</p>
