இறுதி வரை மக்களுக்காக பணியாற்றுவதுதான் ஒரு கம்யூனிஸ்ட்டின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தி.ஜெயசங்கர் பணி நிறைவு பாராட்டு விழாவில் பெ.சண்முகம் பேச்சு
3 Jun 2026, 11:28 pm

இறுதி வரை மக்களுக்காக பணியாற்றுவதுதான் ஒரு கம்யூனிஸ்ட்டின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தி.ஜெயசங்கர் பணி நிறைவு பாராட்டு விழாவில் பெ.சண்முகம் பேச்சு

சென்னை, ஜூன் 3 – தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் தி.ஜெய்சங்கர் வாரிய பணி நிறைவு பாராட்டு விழா செவ்வாயன்று (ஜூன் 2) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “பொதுப் புத்தியைத் தாண்டி, துறை சார்ந்த பணி நேரம் போக எஞ்சிய நேரத்தை தொழிற் சங்கப் பணிக்கு அர்ப்பணிப்பது சாதார ணமானதல்ல.

குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் தொழிற்சங்கப் பணி களை சிறப்பாகச் செய்தார். அரசியல், தொழிற்சங்கப் பணி யாற்றும் ஊழியர்கள், இந்தப் பணி களால் விளையும் நன்மைகளை குடும்ப த்தினருடன் உரையாட வேண்டும்.

இயக்கத்திற்காக வென்றெடுக்க வேண்டும்.

அப்போதுதான் குடும்பத் தின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும்” என்றார். “அண்மையில் மின் ஊழியர் ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்ட ஜெய்சங்கர் காட்டிய அக்கறையும் கவனமும் அள ப்பரியது. முதலமைச்சர் வரை பேசி ஒப்பந்தத்தை உருவாக்க முடிந்தது” என்று குறிப்பிட்ட அவர், “பணி ஓய்வூ பெற்றுள்ள நிலையில் இனி முழுமை யாகத் தொழிற்சங்கப் பணியிலும், கட்சிப் பணியிலும் தன்னை ஈடு படுத்திக் கொள்வார்.

இறுதி மூச்சு இருக்கும் வரை மக்களுக்காகப் பணி யாற்றுவதுதான் ஒரு கம்யூனிஸ்ட்டின் ஆரோக்கியத்திற்கே அடிப்படை அதை அவர் செய்வார்“ என்றும் அவர் கூறினார். பி.சம்பத் “கடந்த 10 ஆண்டுகளில் தொழி லாளர்களின் உண்மையான வருமானம் 37 சதவீதம் குறைந்துள்ளது.

நிரந்தரப் பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலா ளர்களை நியமித்து, ஊதியத்தை சுரண்டுகின்றனர். இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சுரண்டலுக்கு தலைமை தாங்கும் மோடி அரசுக்கு எதிராக டெல்லி உட்பட நாடு தழுவிய அளவில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது” என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் கூறினார். லெனின் கூறியபடி, சிஐடியு அமைப்பு தொழிற்சங்கங்களை சோசலி சத்திற்கான பள்ளிக் கூடங்களாக நடத்து கிறது.

தொழிலாளர்களின் பொருளா தாரப் போராட்டத்தை, அரசியல் அதி காரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமாக மாற்றும் மகத்தான பணியை ஜெய்சங்கர் முழு நேரமாகச் செய்யவுள்ளார் என்றும் பி.சம்பத் கூறினார். கே.கனகராஜ் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.கனகராஜ் குறிப்பிடுகையல், “தொழிற்சங்க இயக்கம் அரசியல் உணர்வுடன் செயல்படவில்லை யெனில் அது எதிரியின் ஆயுதமாக மாறி விடும். பணிச்சுமை அதிகரிப்பு, வேலை யின்மை என சவால்கள் நீடிக்கின்றன. பேச்சுவார்த்தை அல்லது நல்லெண் ணம் மட்டுமே உரிமைகளைப் பெற்றுத் தந்துவிடாது.

அரசியல் உதவிகள் ஒரு போதும் நேரடி தொழிற்சங்கப் போரா ட்டத்திற்குப் பதிலீடாக முடியாது. ஐடிஐ படித்தவர்கள், மஸ்தூர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை திரட்டி அடுத்தகட்ட போராட்டத்திற்குத் தயார்படுத்துவதில் ஜெய்சங்கர் தீவிர கவனம் செலுத்தினார். தொழிலா ளர்கள் தங்கள் குடும்பத்தினரையும் பங்கெடுக்கச் செய்து, போராட்டங் களை அணி அணியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

எஸ்.கண்ணன் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் பேசுகையில், “ஒன்றிய, மாநில அரசுகள் தீவிர ஆட்குறைப்பு, சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதால், மின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை விட தற்போதுள்ள உள்ள ஊழி யர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இதனால் வேலைப்பளு இரட்டிப்பாகியுள்ளது. உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்படுகிறது.

தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இதற்கெதிராக போராட்டம் வலுவாக நடத்த வேண்டும். தொழிற் சங்கங்களின் தொடர் போராட்டங்கள், ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகள் தகர்க்கும் எரி நெருப்பாக மாறும் என்பதை வட இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள் உணர்த்துகின்றன. அத்தகைய போராட்டத்தை முன்னெ டுக்க ஜெய்சங்கர் தொடர்ந்து பணியாற் றுவார்” என்றார்.

இந்நிகழ்வில், சிஐடியு, சிபிஎம் மத்தியசென்னை மாவட்டக்குழுக்கள் மற்றும் நிர்மல் பள்ளிக்கு வளர்ச்சி நிதி யாக தலா 5ஆயிரம் ரூபாயை தி. ஜெய சங்கர் வழங்கினார். நிகழ்விற்கு மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார்.

சென்னை மண்டல செயலாளர் ஆர்.ரவிக் குமார் வரவேற்றார். சிஐடியு மாநில பொருளாளர் எஸ்.ராஜேதிரன், மத்திய அமைப்பின் பொருளாளர் எம்.வெங்க டேசன், பொறியாளர் அமைப்பின் பொதுச் செயலாளர் கே.அருட்செல் வன், ஓய்வூதியர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரம ணியம், சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் எஸ்.கே.முருகேஷ், சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா உள்ளிட்ட பலர் பேசினர். காஞ்சிபுரம் மண்டலச் செயலா ளர் ஏ.முருகானந்தம் நன்றி கூறினார்.