முந்தய பக்கம்

செங்கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்று பதவியேற்ற டி. அசோக்குமார் எம்எல்ஏ!

20 May 2026, 11:10 pm
செங்கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்று பதவியேற்ற டி. அசோக்குமார் எம்எல்ஏ!
<p><strong>செங்கொடிகளுடன் ஊர்வலமாகச் சென்று பதவியேற்ற டி. அசோக்குமார் எம்எல்ஏ!</strong></p><p>புதுச்சேரி, மே 20 - புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பி னர்கள் பதவியேற்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாஹே சட்ட மன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவோடு வெற்றி பெற்ற வழக்கறிஞர் டி. அசோக்குமார் எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, பதவியேற்பு விழா வில் கலந்து கொள்வதற்காக, புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே இருந்து செங்கொடிகள் சூழ ஊர்வல மாக சட்டமன்றம் நோக்கிச் சென்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ. பெருமாள், இரா. ராஜாங்கம், கொளஞ்சியப்பன், சீனுவாசன், மூத்த தலைவர் த. முரு கன், சிபிஎம் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேந்திரன், மாஹே பகுதி நிர்வாகி கள் ஜனார்த்தனன், நவுசாத் மற்றும் புதுச்சேரி மாநிலக்குழு உறுப்பினர் கள் உட்பட திரளானோர் ஊர்வல த்தில் கலந்து கொண்டனர். அவர்கள், வழக்கறிஞர் டி. அசோக்குமாரை வாழ்த்து முழக்கங்களுடன் சட்டப்பேர வைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram