முந்தய பக்கம்

செய்யது பீடி கம்பெனியை தொடர்ந்து இயக்க வேண்டும் பீடித்தொழிலாளர் சங்கம் கோரிக்கை

27 Jun 2026, 11:20 pm
செய்யது பீடி கம்பெனியை தொடர்ந்து இயக்க வேண்டும் பீடித்தொழிலாளர் சங்கம் கோரிக்கை
<p><strong>செய்யது பீடி கம்பெனியை தொடர்ந்து இயக்க வேண்டும் பீடித்தொழிலாளர் சங்கம் கோரிக்கை</strong></p><p>தென்காசி, ஜூன் 27- தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம் நெட்டூர் கிராமத்தில் ஜுன் 26 வெள்ளியன்று பீடி தொழிலாளர் சங்க கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக முப்புடாதி, செய லாளராக புவனேஸ்வரி, பொருளாளராக பிரேமா மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டத்தில் செய்யது பீடி கம்பெனி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி, கம்பெனி நிர்வாகத்திடம் 29.06.2026 அன்று அனைத்து பீடி தொழிலாளர்களும் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால், தொடர்ந்து போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செய லாளர் எம். மணிகண்டன், பீடித்தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பி.தர்மக்கனி, மாவட்ட நிர்வாகி ஏ. பத்மா மற்றும் நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram