எஸ்ஐஆர் ஜனநாயகத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது : முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி குற்றச்சாட்டு
15 Jul 2026, 9:10 pm

எஸ்ஐஆர் ஜனநாயகத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது : முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி குற்றச்சாட்டு

புதுதில்லி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயகத்தி ற்குப் பெரும் சவாலாக உள்ளது என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணை யர் எஸ்.ஒய்.குரேஷி குற்றம்சாட்டி யுள்ளார்.

தனது புதிய புத்தகமான ‘இந்தியா அண்ட் ஐ: எ ஹண்ட்ரட் மெமரிஸ், நாட் எ மெமயர்’ (India and I: A Hundred Memories, Not a Memoir) வெளியீட்டு விழாவையொட்டி, பிடிஐ செய்தி தளத் திற்கு அளித்த பேட்டியின் போது எஸ்.ஒய்.குரேஷி பேசுகையில், “தற்போது நடைபெற்று வரும் வாக்கா ளர் பட்டியலுக்கான ‘சிறப்பு தீவிர திருத்தப் பணி’ (எஸ்ஐஆர்) நியாயமற்ற தாக உள்ளது.

எஸ்ஐஆர் பணி வாக்கா ளர்களை நீக்குவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது தேர்தல் ஆணையம் முடிந்தவரை அதிக மானோரை வாக்காளர் பட்டியலிலி ருந்து எப்படி வெளியேற்றலாம் என்றே சிந்தித்து செயல்படுகிறது

. இதன்மூலம் அவர்களுக்கு (தேர்தல் ஆணையம்) ஏதோ அதிக மதிப்பெண்கள் கிடைக்கி றது என்று நினைக்கிறேன். அதற்கா கத்தான் இவ்வாறு செயல்படுகின்ற னர். இதுபோன்ற செயல்கள் ஜனநா யகத்தின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, தேர்தல் முறையின் நேர்மை யைச் சீர்குலைத்துள்ளது. தேர்தல் கட்டிடம் உளவுத்துறை கட்டுப்பாட்டில் ஜூலை 30, 2010 முதல் ஜூன் 10, 2012 வரை தலைமைத் தேர்தல் ஆணையரா கப் பணியாற்றியுள்ளேன்.

தனது பத விக்காலத்தில் அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் இருந்த தில்லை. தேர்தல் ஆணையத்தின் பிம்பம் அப்போது மிகவும் வலுவாக இருந்தது. எனவே, எங்களை அணுகு வதற்கு யாருக்கும் தைரியம் இருக்க வில்லை.

அப்போதைய காலகட்டத் தில் தேர்தல் தேதிகளைத் தெரிந்து கொள்ளும் கடைசி நபர் அரசாங்கமாகத் தான் இருக்கும். நாங்கள் பத்திரிகையா ளர் சந்திப்பில் அறிவிக்கும்போதுதான் அரசாங்கத்திற்கே அது தெரியும். ஆனால் தற்போது தேர்தல் தேதிகளைத் தெரிந்துகொள்ள உளவுத்துறை அதி காரிகள் தேர்தல் ஆணையக் கட்டிடத் தைச் சுற்றி வருவார்கள். இது மோச மானது” என அவர் கூறினார்.