கால நிலை மாற்றத்தால் 5 ஆண்டுகளில் 20 சதவிகித பனிப்பாறைகள் அழிவு
2 Oct 2026, 8:59 pm

கால நிலை மாற்றத்தால் 5 ஆண்டுகளில் 20 சதவிகித பனிப்பாறைகள் அழிவு

பெர்ன்,அக்.2-தீவிரமடையும் காலநிலை மாற்றத்தின் காரணமாக சுவிட்சர்லாந்தில் கடந்தஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 சதவிகித பனிப்பாறைகள் அழிந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது அந்நாட்டின் ஒட்டுமொத்த பனிப்பாறைகளில் ஐந்தில் ஒரு பங்காகும். சுவிஸ் பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பு மற்றும் சுவிஸ் கிரையோஸ்பியர் கண்காணிப்பு ஆணையம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.ஐரோப்பிய கண்டம் முழுவதுமே மிக அதிகமான வெப்ப அலைகள் வீசி வருகின்றன. இதனால் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. 1864-இல் இருந்து கோடை கால வெப்பம் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. இதில் 2026 ஏப்ரல்முதல் செப்டம்பர் வரையிலான கோடைக்காலம் தான் மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட காலமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அக்காலக் கட்டத்திலிருந்து கார்ப்பரேட்டுகளும் பெரு நிறுவனங்களும் 1.8 டிரில்லியன் டன் கார்பன்டை ஆக்சைடை வளிமண்டலத்தில் கலந்து, புவியின் வெப்பநிலையை சுமார் 1.4°C வரை உயர்த்தியுள்ளன.

காலநிலை மாற்றத்தின் காரணமாக 2026 இந்த முதல் எட்டு மாதங்களில் மட்டும் 5.5 சதவிகிதம் வரை பனிப் பாறைகள் உருகியுள்ளன. குறைந்த பனிப்பொழிவு, மோசமான வெப்ப அலையே இதற்கு முக்கியக் காரணம். 2021-லிருந்து19.4 சதவிகிதம் அளவுக்கு பனிப்பாறைகள் உருகியுள்ளன.

புதைபடிவ எரிபொருட்களால் ஏற்படும் மாசுபாடு மற்றும் எந்த ஒருமாற்றுத்திட்டமும் இன்றி கார்ப்பரேட்டு

களின் லாபத்திற்காக வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள்உலகம்முழுவதும்அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, ஐரோப்பியகண்டம் உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது.

பிரம்மாண்டமான பனிப் பாறைகளால் சூழப்பட்டிருந்த ஆல்ப்ஸ் மலைப்பகுதி, தற்போது பாறைகள் தெரியக்கூடிய அளவுக்கு பனிக்கட்டிகள் உருகி மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள்வேதனை தெரிவிக்கின்றனர்.

பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாக உருகி வருகின்றன என்பதைப் பலரும் உணர்வதில்லை. ஒரு தலைமுறைக்குமுன்பு நூற்றுக்கணக்கான மீட்டர்கள் உயரத்திற்கு பனியால் மூடப்பட்டிருந்த பகுதிகள், இன்று பாறைகள் தெரியும்அளவிற்கு உருகி வருகின்றன என சூரிச் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணரும் (Glaciologist) இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியருமான மத்தியாஸ் ஹஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது கடந்தவாரம் நான் ஒரு பகுதிக்குச் சென்றிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பறந்து விரிந்த பனிப்படலமாக இருந்த இடம், இப்போது வெற்றுப்பாறைப் பாலைவனமாக இருந்தது. சூடான பாறைகளின் மீது பழைய பனிக்கட்டித் துண்டுகள் சிதறிகிடந்தனஅவையும் அப்போது உருகிக் கொண்டிருந்தன. இந்த மோசமான மாற்றத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் எனதனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த காலத்திலும் பனி உருகியது. ஆனால் உருகும் விகிதம் இயல்பான அளவில் தான் இருந்தது. ஆனால் இப்போது நாம் காண்பது பனி உருகும் வேகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு ‘வெடிப்பு’ (Explosion). பனிப்பாறைகள் தங்களின்கட்டமைப்பை இழந்து முற்றிலும் சிதைந்து வருகின்றன என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.