சுவாமி சகஜானந்தா சமுதாயக் கூடத்தை புதுப்பிக்க சிறப்பு நிதி நந்தனார் கல்வி கழகம் கோரிக்கை
1 Oct 2026, 2:05 am

சுவாமி சகஜானந்தா சமுதாயக் கூடத்தை புதுப்பிக்க சிறப்பு நிதி நந்தனார் கல்வி கழகம் கோரிக்கை

சிதம்பரம், செப் 30-ராணிப்பேட்டை மாவட்டம், மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள சுவாமி ஏ.எஸ். சகஜானந்தா சமுதாயக் கூடத்தைப் புதுப்பித்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என சிதம்பரம் நந்தனார் கல்விக் கழகத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான கே.ஐ. மணிரத்தினம், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் உரிமை களுக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தா, சிதம்பரம் ஓமக்குளக்கரையில் நந்தனார் மடத்தை அமைத்து, கல்வி வளர்ச்சிக்காகப் பெரும் தொண்டாற்றியவர். அவரது பிறந்த ஊரான மேல் புதுப்பாக்கத்தில், அவரது நினைவாகவும், பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் அன்றைய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராக இருந்த எல். இளையபெருமாள் எம்.பி முயற்சி யால் 1988-ஆம் ஆண்டு இந்தச் சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டது.

தற்போது உரிய பராமரிப்பின்றி கட்டடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, இக்கட்டடத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, முழுமையாகப் புதுப்பிக்க வேண்டும். இல்லையேல் முழுவதும் இடித்துவிட்டு நவீன முறையில் புதிய கட்டிடம் கட்டவேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை யினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.ஐ. மணிரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.