தென் தமிழகத்தில் ரூ.200 கோடியில் புதிய காற்றாலை திட்டம்
9 Oct 2026, 8:50 pm

தென் தமிழகத்தில் ரூ.200 கோடியில் புதிய காற்றாலை திட்டம்

தூத்துக்குடி, அக்.9 -காற்றாலை மின்சார உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சுஸ்லான் குழுமம், தென் தமிழகத்தில் புதிய காற்றாலை இறக்கை உற்பத்தி ஆலையை அமைக்க ரூ.200 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 2,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தூத்துக்குடி - மேலகரந்தை தேசிய நெடுஞ்சாலையில் 40 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலை, இரண்டு உற்பத்திப் பிரிவுகளைக் கொண்டிருக்கும். இங்கு சுஸ்லானின் 5 மெகாவாட் திறன் கொண்ட அதிநவீன எஸ் . 175 காற்றாலைப் பொறிகள் (டர்பைன்) தயாரிக்கப்பட உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நேரடியாக சுமார் ரூ.775 கோடி முதலீடு செய்துள்ளதாகவும், தற்போது 2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1,500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் அளித்துவருவதாகவும் சுஸ்லான் குழுமத்தின் இணை நிறுவனர் கிரிஷ் தாந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் இதனை தெரிவித்த அவர், புதிய ஆலையின் மூலம் மேலும் 500-க்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளும், 1,500 மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்றாலை மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய உற்பத்தித் திறனை

விரிவாக்கி வரும் சுஸ்லான் நிறுவனம், இந்த விரிவாக்கம்

குறித்து தமிழ்நாடு அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உற்பத்தித் திறன், பணியிட பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், இந்த உயர் தொழில்நுட்ப ஆலையில் டிஜிட்டல் தொழில்

நுட்பங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட உள்ளன.