முந்தய பக்கம்

மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

9 May 2026, 2:01 pm
மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு!

மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பாஜக-வின் சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றிப் பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் மூலம், அம்மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்குக் வந்தது. பாபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக போட்டியிட்ட பாஜக-வை சேர்ந்த சுவந்து அதிகாரி முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பாஜக-வின் சுவேந்து அதிகாரி பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திலீப் கோஷ், அக்னிமித்ர பால், அசோக் கிர்டோனியா, க்ஷுதிராம் துடு, நிசித் பிரமானிக் ஆகிய 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோர் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram