வைரலாகும் பாஜக முதலமைச்சரின் மாட்டிறைச்சி உண்ணும் வீடியோக்கள்
26 May 2026, 9:12 pm

வைரலாகும் பாஜக முதலமைச்சரின் மாட்டிறைச்சி உண்ணும் வீடியோக்கள்

நீங்கள் உண்ணலாம்; நாங்கள் உண்டால் தவறா?: மேற்கு வங்க மக்கள் கொதிப்பு

சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அங்கு முதன்முறையாக ஆட்சியை கைப் பற்றியது. முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வர்.

சுவேந்து அதிகாரி முதலமைச்ச ராக பொறுப்பேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே மாட்டு இறைச்சி விற்க கட்டுப்பாடு, இறைச்சிக்காக மாடுகளை வெட்டக் கட்டுப்பாடு என பல்வேறு மதவெறி அடாவடிகளை செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைவதற்கு முன்பு, அவர் மாட்டு இறைச்சியை தான் விரும்பி அதிகளவில் உண்டார் என்றும், இதுதொடர்பான வீடியோக்க ளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தற்போது மொத்தம் 5க்கும் அதிகமான வீடி யோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவில் இணைவதற்கு முன்பு மாட்டி றைச்சியை விரும்பி உண்ட, அதே சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்த பின்பு கட்டுப்பாடுகளை விதிக்கிறார் என மேற்கு வங்க மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் மாட்டிறைச்சி முக்கியமானது

கேரளம், வடகிழக்கு மாநிலங்க ளைப் போன்று மேற்கு வங்க மாநிலத்தில் மாட்டிறைச்சி முக்கிய உணவாகும். அங்கு 53%க்கும் அதிக மானோர் மாட்டிறைச்சி உண்கின்ற னர். இதில் ‘கொல்கத்தா ஸ்டைல் பீப் பிரியாணி’ சிறப்பு வாய்ந்தது. இந்த வகை பிரியாணியில் மாட்டி றைச்சியுடன் உருளைக்கிழங்கு, முட்டை சேர்ப்பார்கள். இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.