உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து
18 Feb 2026, 3:04 pm
<p><strong>உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து</strong></p>
<p>திருநெல்வேலி,பிப். 18- நெல்லை மாவட்டம் முண்ணீர்பள்ளத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலக வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கத் தின் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது, அந்த நேரத்தில் 15 தொழி லாளர்களை டாஸ்மாக் மேலாளர் தன்னிச்சையாக சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டார் இதனை கண்டித்து 15 பேர் மீதான சஸ்பெண்டை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் டாஸ்மாக் ஊழியர்கள் சுமார் 200 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் டாஸ்மாக் அனைத்து ஊழி யர்கள் கூட்டமைப்பு நிர்வாகி கள் சிவன்ராஜ், ராமராஜ், ராமர் பாண்டியன், முத்துச் செல்வன், ஜெய் கணேஷ், கைக்கொண்டான் சாமி மற்றும் கூட்டுக்குழு தோழர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஊழியர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்வதாக மாவட்ட மேலாளர் அறிவித்தார். </p>
