தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதலீட்டு மோசடி வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது

yesterday
முதலீட்டு மோசடி வழக்கு: பணியிடை நீக்கம்  செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது

முதலீட்டு மோசடி வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது

சென்னை, ஜூலை 8- தங்க நாணய முதலீட்டுத் திட்டத் தில் மோசடி செய்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஷீலா மேரி மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடி நடந்தது எப்படி?

சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வா ளராகப் பணிபுரிந்தவர் ஷீலா மேரி. இவருடைய உறவினர் பிரபுமணி, கடந்த 2023-ம் ஆண்டு ‘விநாயக என்டர் பிரைசஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத் தைத் தொடங்கி, வாட்ஸ்அப் குழு மூலம் முதலீட்டுத் திட்டம் ஒன்றை அறி முகப்படுத்தினார். சந்தை விலையை விடக் குறைந்த விலையில் தங்க நாண யங்கள் தருவதாகவும், முதலீடு செய்ப வர்களுக்கு மாதந்தோறும் லாபம் தரு வதாகவும் இதில் வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்தது.

ஆய்வாளரின் பங்கு

ஆய்வாளர் ஷீலா மேரி, இந்தத் திட்டத்தை சக காவலர்கள் மற்றும் வட சென்னையில் உள்ள காவலர் குடியிருப்புவாசிகளிடம் விளம்பரப் படுத்தி, பலரை இதில் முதலீடு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. திட்டத்தின் தொடக்க காலத்தில், ஷீலா மேரி தனது அதிகாரப்பூர்வ வாகனத் திலேயே பிரபுமணியை அழைத்துச் சென்று, குறைந்த விலையில் தங்க நாணயங்களை வழங்கச் செய்தார். இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பி க்கையைப் பெற்று, பெரும் தொகை யைத் திரட்டியுள்ளனர். ஆனால், அதன் பிறகு சொன்னபடி தங்க நாணயங்க ளையோ, லாபத்தையோ வழங்காமல் மோசடி செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை

இது தொடர்பாக ஒரு வங்கி ஊழியர் அளித்த புகாரின் பேரில், பொருளா தாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் பிரபுமணி கடந்த ஜூன் 9-ம் தேதி கைது செய்யப் பட்டார். தற்போது, தலைமறைவாக இருந்த ஷீலா மேரி, செந்தில்குமார் மற்றும் கல்பனா ஆகிய மூவரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீ ஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து ள்ளனர்.

இதுவரை இந்தத் திட்டத்தில் 56 பேர் சுமார் 18.17 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து ஏமாந்திருப்பது கண்ட றியப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.