உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்கிறார்
23 Nov 2025, 3:44 pm

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யா காந்த்

இன்று பதவியேற்கிறார்

புதுதில்லி உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதி பதியாக இருந்த பி.ஆர். கவாய் வெள்ளிக்கிழமை அன்று ஓய்வு பெற்றார். அவரைத் தொட ர்ந்து 53ஆவது தலைமை நீதிபதி யாக சூர்யா காந்த் திங்கள் கிழமை அன்று பதவியேற்கி றார். குடியரசுத் தலைவர் மாளி கையில் நடைபெறும் பதவி யேற்பு இந்நிகழ்வில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு (பதவி பிரமாணம் செய்து வைப்பார்) மற்றும் பிரேசில், பூடான், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபா ளம், இலங்கை உட்பட 7 நாடு களின் தலைமை நீதிபதிகள் மற் றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்ள உள்ளனர். நீதி பதி சூர்யா காந்த் நவம்பர் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு, பிப்ரவரி 9, 2027 அன்று ஓய்வு பெறுகிறார். அதாவது அவரது பதவிக்காலம் தோராயமாக 14 மாதங்கள் ஆகும். யார் இந்த சூர்ய காந்த்? ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத் தில் 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்த சூர்ய காந்த், அம்மாநிலத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நபராவார். மிகக் குறைந்த வய தில் (38) ஹரியானா அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த சூர்ய காந்த், 2004ஆம் ஆண்டு ஹரியானா மற்றும் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றார். நீதிபதியான பிறகும் சூர்ய காந்த் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். 2011ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழ கத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். உயர்நீதிமன்ற நீதிபதியாக 14 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், அக்டோபர் 2018இல் இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், உச்சநீதிமன்ற நீதிபதி யாக 2019ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.