நில அளவை அலுவலர்களின் வேலை நிறுத்தம் துவக்கம்
18 Nov 2025, 3:21 pm
<p><strong>நில அளவை அலுவலர்களின் வேலை நிறுத்தம் துவக்கம்</strong></p>
<p>தருமபுரி, நவ.18- 18 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு நல அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில், செவ்வாயன்று முதல் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது. நிலம் சார்ந்த அனைத்து பரா மரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும். நில அளவர் களாக ஒருமுறை தரம் இறக்கப் பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண் டும். 2025 ஆம் ஆண்டு பதவி உயர் வுக்காக தகுதி பெற்றும் பணியிடம் இல்லாததால் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள அனைவரையும் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதிய வர்களின் முடிவுகள் அறிவிக்கப்ப டாமல் உள்ளதால், நில அளவர்கள் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவைப்பணிகளை கருத் தில் கொண்டு உடனடியாக நில அள வர் பணியிடங்களை நிரப்ப வேண் டும். துணை ஆய்வாளர், ஆய்வா ளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவ லர்கள் ஒன்றிப்பின் சார்பில் காலவ ரையற்ற போராட்டம் செவ்வா யன்று துவங்கியது. தருமபுரி மாவட்டத்தில் 7 வட்டங் களிலும் நில அளவை மேலாண்மை மையம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களில் ஆய்வாளர், துணை ஆய்வாளர், வட்ட சார் ஆய் வாளர், சார் ஆய்வாளர், குறு வட்ட அளவர், நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களில் 105 பேர் பணி யாற்றுகின்றனர். காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடை பெற்று வருவதாலும் மொத்த பணி யாளர்களும் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், தரு மபுரியில் செயல்படும் நில அளவை மேலாண்மை மையம் பூட்டியுள் ளது. இதேபோன்று மற்ற வட்டங்க ளில் அலுவலகம் பூட்டியும், பணி யாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டதால் அலுவலகங்கள் வெறி சோடியுள்ளன.</p>
