சுருளி, கும்பக்கரை அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் உற்சாகக் குளியல்
3 Oct 2026, 11:31 pm
<p><strong>சுருளி, கும்பக்கரை அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் விடுமுறை நாளில் சுற்றுலா பயணிகள் உற்சாகக் குளியல்</strong></p><p>தேனி, அக்.3-தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக சுருளி, கும்பக்கரை அருவிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கொளுத் தும் வெயிலுக்கு இதமாக, நீர்வரத்து நிறைந்த அருவிகளில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.</p><p>தேனி மாவட்டத்தின் முக் கிய சுற்றுலாத் தலங்களாக சுருளி அருவி, கும்பக்கரை அருவி மற்றும் சின்னச் சுருளி அருவி ஆகியவை விளங்கிவருகின்றன. இந்த அருவிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் நீர்வரத்து வெகு வாக குறைந்து காணப் பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அவ்வப்போது வனத்துறையினரால் தடை விதிக்கப் பட்டு வந்தது.இந்நிலையில், சமீபத் தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அருவிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. தற் போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதாலும் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.</p>
