வறண்டது சுருளி, கும்பக்கரை அருவிகள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
23 May 2026, 10:33 pm
<p><strong>வறண்டது சுருளி, கும்பக்கரை அருவிகள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்</strong></p><p>தேனி, மே 23- தேனி மாவட்டத்தின் பிர தான அருவிகளான கும்பக் கரை, சுருளி அருவிகள் நீர் வரத்து இன்றி வறண்டதால் வெளி மாவட்ட சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தேனி மாவட்டம் கொடைக் கானல் மலை அடிவாரம், கேரள எல்லையில் அமைந்துள்ளதால் வெளி மாவட்ட, மாநில சுற் றுலா பயணிகள் தேனி மாவட்டம் வழியாக மூணாறு, தேக்கடி, கொடைக்கானல் செல்வர். வரும் போது கும்பக்கரை அருவி, சுருளி அருவியில் நீராடி செல் வது வாடிக்கை. இந்நிலையில் மழையின்றி கும்பக்கரை, சுருளி அருவிகள் வறண்டன. இந்த இரண்டு அரு விகளும் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாகும். அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம டைந்துள்ளனர்.</p>
