தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

6 Jun 2026, 9:25 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

குதிரை பேரத்தை தடுக்க புதிய மசோதா

தேர்தல்களில் வெளிப்படைத் தன்மையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் (சரத் ) எம்.பி., சுப்ரியா சுலே தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களி டம் அவர் மேலும் கூறுகையில், “மகா ராஷ்டிரா சட்ட மேலவைக்கான தேர்தலில் சலுகைகள், அழுத்தங்கள் குறித்த புகார்கள் எழுந்துள்ளன. அத னால் தேர்தல் செயல்முறையில் கட்ட மைப்பு மாற்றங்களைக் கோரும் வகை யில் நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்வேன்.

தேர் தல்களின்போது நடைபெறும் ‘குதிரை பேரம்’ தொடர்பான புகார்கள் நிறுத்தப் பட வேண்டும். கிராம ஊராட்சித் தலைவர், முதல் மக்களவை தேர்தல் வரை அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் தேர்தல்க ளில் நடைபெறும் குளறுபடியைக் களைய ஒரு குடிமகளாகவும் மக்கள் பிரதிநிதியா கவும் குதிரை பேரத்தை தடுக்கவே இந்த மசோதாவை கொண்டுவருகிறேன். முன் மொழியப்பட்ட இந்தச் சட்டம் தேர்தல் செயல்முறையில் கட்டமைப்பு மாற்றங்க ளை ஏற்படுத்தும்” என அவர் கூறினார்.

ரஷ்யாவிடமிருந்து 38% கச்சா எண்ணெய் இறக்குமதி

உலக அளவில் கச்சா எண்ணெய்ச் சந்தையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தியா தனது எண்ணெய் இறக்குமதி உத்தியை மாற்றி யுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தி யா தனது ஒட்டுமொத்த கச்சா எண் ணெய் தேவையில் கிட்டத்தட்ட 38 விழுக் காட்டை ரஷ்யாவிடமிருந்து மட்டுமே இறக் குமதி செய்துள்ளது.

இது கடந்த ஓராண்டில் இல்லாத மிக உயர்ந்த அளவாகும். மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக உல கச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது.

இதனால், இந்தியா தனக்குத் தேவையான எண் ணெய்யைப் பெற மீண்டும் ரஷ்யாவை அதி கம் நம்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, மார்ச் மாதத்தோடு ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் இந்தி யாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 23% அதிகரித்து, மொத்தம் 19.53 மில்லியன் டன்களாக உயர்ந்தது.

இந்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மட்டும் மூன்றில் ஒரு பங்காக, அதாவது சுமார் 6.7 மில்லியன் டன்களாக உள்ளது. இது முந்தைய மாதங்களை விட மிக அதிகமாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.