தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்திருந்தால் அதனை ரத்து செய்வோம்! உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

5 Oct 2026, 8:29 pm
ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்திருந்தால் அதனை ரத்து செய்வோம்! உச்சநீதிமன்றம்  கடும்  எச்சரிக்கை

ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்திருந்தால் அதனை ரத்து செய்வோம்!

உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

புதுதில்லிதலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல்ஆணையர்களின் (சுக்பீர் சிங் சாந்து,விவேக் ஜோஷி) ஒப்புதலின்றித் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்குகள் (ராகேஷ் சிங் மற்றும் வழக்கறிஞர்கள் சுதீப் சந்திரா, முதித் குப்தா தாக்கல்செய்த மனு) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிசூர்யகாந்த், ஜோய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ்தேர்தல் ஆணையம் என்ற கூட்டு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தனிப்பட்ட முறையில் கையில் எடுத்துச் செயல்படத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு என்னஅதிகாரம் உள்ளது என்பதை விளக்க வேண்டும் என மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பு வாதங்கள்

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு,”தேர்தல் ஆணையர்களுக்காக 1991ஆம் ஆண்டு சட்டத்தில் இல்லாதஒரு புதிய பாதுகாப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த ‘சட்டத்தின் பிரிவு 16 (Section 16)’இன் படி, தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது பிற தேர்தல் ஆணையர்களாக இருந்தவர்கள், தங்களது பதவிக் காலத்தில்

அதிகாரப்பூர்வமாகச் செய்த நடவடிக்கைகளுக்காக அவர்கள் மீதோ அல்லது ஓய்வுபெற்ற பிறகோ சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எந்தவொருநீதிமன்றமும் விசாரிக்கவோ தொடரவோ முடியாது என்று விதிகள் கூறுகின்றன. குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் தவிர வேறு எந்தவொரு அரசமைப்புச் சட்ட அமைப்பிற்கும் (பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் உட்பட) ஓய்வுபெற்ற பிறகு இத்தகைய குற்றவியல் பாதுகாப்பு கிடையாது. தேர்தல் ஆணையர்களுக்கு மட்டும் எப்படி?”எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த்,”பதவியில் இருக்கும்போது பாதுகாப்பு என்பது எப்போதும் நடைமுறையில் உள்ள ஒன்றுதான்” என்றார். அப்போது குறுக்கிட்ட விகாஸ் சிங்,”ஆனால் இந்தச் சட்டம் ‘பதவியில் இருக்கும் அல்லது பதவியில் இருந்த’ நபர் என்று இரட்டை அர்த்தத்தில் குறிப்பிடுகிறது. அதாவது அவர் பதவியி

லிருந்து ஓய்வுபெற்ற பிறகும் பாதுகாப்பு நீடிக்கிறது. வேறு எந்த அரசியலமைப்பு அதிகார அமைப்பிற்கும் இல்லாதஅளவிலான பாதுகாப்பு இது. நாட்டின் பிரதமருக்குக் கூட இத்தகைய பாதுகாப்பு இல்லை” என்று மீண்டும் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகளுக்கும் இல்லை

தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி ஜோய்மால்யா பாக்சி,”நீதிபதிகளுக்குக் கூட இல்லை” என்று கூறினார். அப்போது விகாஸ்சிங்,”நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்க்கக்கூடிய மிகக் கடுமையான சூழலை நாம் எதிர்கொள்கிறோம். உலகம் முழுவதும் நமது ஜனநாயகம்அதன் தேர்தல்கள் நடத்தும் முறைக்காகப் புகழ்பெற்றது. 76 ஆண்டுகளாகத் தேர்தல் ஆணையம் அனைவராலும் மதிக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு இருக்கலாம்.

ஆனால் இப்போது அரசியலமைப்புச் சட்டஅமைப்பான தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரே, தான் நியமிக்கப்பட்ட சட்டத்திற்கு முற்றிலும்மாறாகச் செயல்படும் சூழலில் நம் நாட்டின் ஜனநாயகம் உள்ளது. இதற்கு உடனடியாக ஏதேனும் இடைக்காலஉத்தரவு தேவை. அதே சமயம் தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது தலைமைத் தேர்தல் ஆணையராகச் செயல்படும் அதிகாரத்தைப் பறித்து, அவருக்குப் பதிலாக மற்ற இரு தேர்தல்ஆணையர்களும் செயல்பட அனுமதிக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இறுதியாகஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியைக் குறிப்பிட்ட விகாஸ் சிங்,”தேர்தல் ஆணையம் அந்தச் செய்திக்குமுறையான விளக்கம் அளிக்காமல், மிகத் தெளிவற்ற மொழியில் ஒரு செய்திக்குறிப்பை மட்டுமேவெளியிட்டுள்ளது” என அவர் வாதிட்டார்.

படிவம் 6க்கு ஒப்புதல் அளிக்கவில்லை

இறுதியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,”மனுதாரர்களின் வாதங்களை ஏற்றுக்கொள்கிறோம். நீதிமன்றம் முன் சில அதிகாரப்பூர்வத் தகவல்கள் வரவேண்டும். நாம் (நீதிமன்றம், மனுதாரர்)10 நாட்கள் காத்திருப்போம். இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி,தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் சீமா கண்ணா மற்றும் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மனீஷ் கார்க் ஆகியோருக்கு விளக்கம் அளிக்கக் கோரி பதிவாளர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். குறிப்பாக எஸ்ஐஆரின்போது புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட படிவம் 6க்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

நோட்டீஸுக்குப் பிறகு அவர்கள் ஆஜராகிசமர்ப்பிக்கும் அறிக்கைகளில், தேர்தல் ஆணையத்தின் முடிவு பெரும்பான்மை அடிப்படையிலோ அல்லது ஒருமனதாகவோ எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தால், அந்த முடிவுகள் குறித்து அவர்கள் விளக்கம்அளித்தாக வேண்டும். ஆனால் முடிவுகளில்ஏதேனும் தவறுகள் இருந்தால் (ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவு எடுத்திருந்தால்), அவற்றை எப்போது வேண்டுமானாலும் எங்களால் ரத்து செய்ய முடியும்.செய்தித்தாளின் அறிக்கை 100 சதவீதம் சரியானதாகவோ, பகுதி சரியானதாகவோ அல்லது பகுதி தவறானதாகவோ இருக்கலாம். அதன் அடிப்படையில் இன்றே நாங்கள்எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆனால்கண்டிப்பான விளக்கத்தை நாம் பெற விரும்புகிறோம். அதன் பிறகு, தேவையான நடைமுறை சார்ந்த நடவடிக்கைகள் எதுவோ, அதை நாங்கள் பிறப்பிப்போம்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.