தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தெரு நாய்களை கட்டுப்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

19 May 2026, 9:05 pm
தெரு நாய்களை கட்டுப்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

தெரு நாய்களை கட்டுப்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுதில்லி மாநில அரசுகள் தெரு நாய் களை கட்டுப் படுத்த தவறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள் ளது.

கடந்த 2025 நவம்பர் 25 ஆம் தேதி பள்ளிகள், மருத்துவமனை கள் மற்றும் ரெயில் நிலையங்கள் என குழந்தைகள், பொதுமக்கள் பயன்பாடு அதிகமுள்ள பகுதிக ளில் இருந்து அனைத்து தெரு நாய்களையும் அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வெறிநாய்க்கடியின் தீவிரத்தை உணர மறுத்த பலரும் செல்லப்பிராணி ஆர்வலர்கள் என்ற பெயரில் இவ்வுத்தரவை திரும்பப் பெறக்கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு தவறி விட்டது.

தெரு நாய்களை கட்டுப் படுத்த தவறியதால் குழந்தை கள் நேரடியாக பாதிக்கப்படுவது டன், தினமும் நாய்களால் கடிபடு கின்றனர்.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் நாய்க்கடிகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதில், 17 பேர் ரேபிஸ் நோய் தாக்கத்தால் உயிரி ழந்துள்ளனர்.

பரபரப்பான விமான நிலையங்களிலும் கூட தெருநாய்க்கடிகள் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்தியா விற்கு வரும் வெளிநாட்டு சுற்று லாப் பயணிகள் கூட நாய்க்கடிக ளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2025 ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதம் உத்தரவிட்டும், மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இனியும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி னால் நீதிமன்ற அவமதிப்பு நட வடிக்கை எடுக்கப்படும் என எச்ச ரித்துள்ளது.

ஏற்கெனவே நீதிமன்றம் உத்த ரவிட்டதன்படி உடனடியாக மாநில அரசுகள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையத்தை ஏற் படுத்த வேண்டும்.

கல்வி நிறுவ னங்கள் உள்ளிட்ட வளாகங்களில் இருந்து தெருநாய்களை அப்பு றப்படுத்த வேண்டும் என்ற உத்த ரவையும் மாநில அரசு அமல் படுத்த வேண்டும்.

விலங்குகள் நலவாரிய விதிகளை கண்டிப் பாக கடைப்பிடிக்க வேண்டும்.

வெறிபிடித்த நாய்களை கரு ணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட் டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தியதை மாநில உயர் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். பல இடங்களில் நிலுவையில் இருக்கும் வழக்கு களை இணைத்து விசாரணை செய்து, அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்கா ணிக்க வேண்டும்.

அதுகுறித்து தலைமைச் செயலாளர் தொ டர்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அம்மனுக்களை தள்ளுபடி செய்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.