உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எச்சரிக்கை!
23 Sept 2026, 10:35 pm

உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எச்சரிக்கை!

இந்தியக் குடியரசின் அடித்தளமாக விளங்கும்மதச்சார்பின்மைக்கும், தனிமனித உரிமைகளுக்கும் எதிராக ஒன்றிய மோடி அரசு மேற்கொண்டுவரும் பெரும்பான்மைவாத திணிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மிகக்கூர்மையானதொரு கேள்வியை எழுப்பியுள்ளது. தேசியப் பாடலை (வந்தே மாதரம்) பாடியாக வேண்டும்என்று கட்டாயப்படுத்துவதும், மறுப்பவர்களைக் குற்றவியல் சட்டங்களின் கீழ் தண்டிப்பதும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம்சுட்டிக்காட்டியுள்ளது. பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தாக்கல்செய்த மனுவை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேசிய அவமதிப்பு தடுப்பு (திருத்தச்) சட்டம், 2026இன் கீழ்தனிமனித நம்பிக்கைகள் மீது சட்டத்தைத் திணிக்க முடியாது என்பதைஅழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

குறிப்பிட்ட மத நம்பிக்கையையும் கடவுள் வழிபாட்டையும் சார்ந்துள்ள நிலையில், அவற்றை அனைத்து குடிமக்களும்பாடியே தீர வேண்டும் என்று உத்தரவிடுவது மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானதாகும். பியூஜ் இம்மானுவேல் வழக்கின் வரலாற்றுத் தீர்ப்பை மேற்கோள் காட்டியநீதிபதிகள், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தேசியப் பாடலின் தன்மையை முடிவு செய்யலாமே தவிர,மனச்சாட்சிப்படி அதை ஏற்க மறுப்பவர்களைக் குற்றவாளிகளாக முத்திரை குத்த முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர். மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் போன்ற கடுமையானதண்டனை அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி மக்களின் மீது தேசபக்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயல்வது பாசிசப் போக்காகும்.

சட்டமியற்றும் நடைமுறைகள் குறித்து மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதரன் எழுப்பிய வாதங்கள், ஒன்றிய அரசின் தன்னிச்சையான போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைகள் எவ்வித முறையான விவாதமும் இன்றி,பெரும்பான்மைவாதச் சிந்தனையைச் திணிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்குப் பதிலளித்த சொலிசிட்டர்ஜெனரல் துசார் மேத்தா, அரசின் சட்டமியற்றும் முறைகளைக் கேள்விக்குள்ளாக்குவதை நாகரிகமற்ற முறையில் விமர்சித்ததுடன், ஜனநாயக மரபுகளைக் கேலிக்குள்ளாக்கியுள்ளார். மக்களின் அடிப்படை உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமான மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், பாசிசக் குரல்களில் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதே தவிர, குறிப்பிட்ட ஒரு மத அடையாளத்தை அல்லது வழிபாட்டு முறையை ஒட்டுமொத்த நாட்டின் மீதும் திணிப்பதல்ல. தேசியப்பாடலுக்கான மரியாதை என்பது இதயத்திலிருந்து வரவேண்டுமே தவிர, கத்தி முனையிலும்சிறைச்சாலை பயத்திலும் உருவாக்கப்படுவதாக இருக்கக்கூடாது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆரம்பக்கட்ட கருத்துக்கள்,சிறுபான்மை மக்களின்உரிமைகளையும் மனச்சாட்சிப்படி வாழும் தனிமனிதர்களின் சுதந்திரத்தையும் காப்பதற்கான ஒரு சிறிய வெளிச்சமாகும்.