தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் நடவடிக்கையின் போது குடியுரிமையை ஆய்வுசெய்யும் அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

27 May 2026, 8:15 pm
எஸ்ஐஆர் நடவடிக்கையின் போது குடியுரிமையை ஆய்வுசெய்யும் அதிகாரம் உள்ளது :  உச்சநீதிமன்றம் தீர்ப்பு

எஸ்ஐஆர் நடவடிக்கையின் போது குடியுரிமையை ஆய்வுசெய்யும் அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை யை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் எஸ்ஐஆர் நடவடிக்கையின் போது குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதேபோல அத்தீர்ப்பில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் மறுப்பது என்பது சம்பந்தப்பட்ட நபரின் குடியுரிமையைப் பறிப்பதாக அர்த்தமாகாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்பணி பாஜகவுக்கு ஆதரவாக பாரபட்ச மான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின்படி, பரந்த அளவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதி காரம் இல்லை என்று வாதிட்டனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த தை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவ தாக கடந்த ஜனவரி 29 அன்று அறி விக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை புதனன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது.

பெயர் சேர்க்க மறுப்பது குடியுரிமை பறிப்பல்ல... அதில் கூறப்பட்டிருப்பதாவது: “சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை மேற் கொள்ள இந்திய தேர்தல் ஆணைய த்துக்கு அதிகாரம் உள்ளது.

எந்தவொரு சட்டரீதியான அல்லது அரசியலமைப்பு ரீதி யிலான விதியையும் தேர்தல் ஆணை யம் மீறவில்லை.

எஸ்ஐஆர் நடவடிக்கை யின்போது குடியுரிமையை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.

அதேநேரத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் மறுப்பது என்பது சம்பந்தப்பட்ட நபரின் குடியுரி மையைப் பறிப்பதாக அர்த்தமாகாது என கூறியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அது மேலதிக சட்ட ரீதியான விசாரணைக்கு உட்பட்டதாக இருக்கும்.

குடியுரிமையை நிரூபிக்க இயலாத காரணத்தால் பெய ர்கள் நீக்கப்பட்ட நபர்களை, உரிய சட்ட ரீதியான விசாரணைக்காக தகுந்த அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்க வேண்டும்.

சுதந்திரமான, நியாயமான தேர்த லுக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்கிறது.

அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல்களைத் திருத் தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் பணிகள் மூலம் உயி ருடன் இருந்த பலரது வாக்குகள் குறிப்பாக எதிர்கட்சியினரின் வாக்குகள் நீக்கப்பட்ட தாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குடியுரிமை நிரூபிப்பது என்ற முறையும் இதில் இணைந்திருப்பது பெரும் சர்சைக்குரிய விசயமாக உள்ளது என கடும் எதிர்ப்பு கள் எழுந்தன.

பாஜகவுக்கு ஆதர வாகவே இந்த பணிகளை தேர்தல் ஆணை யம் செய்து வருகிறது என கடுமையான விம ர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போதைய தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.