உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அம்பலமாகும் ஒடுக்குமுறையும்!
14 Jul 2026, 9:27 pm

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அம்பலமாகும் ஒடுக்குமுறையும்!

ஒன்றிய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடி மக்கள் பதிவேடு (என்ஆர்சி) போன்ற மக்கள் விரோதத் திட்டங்களின் நிழலில், அப்பாவி மக்களை “அந்நியர்கள்” என முத்திரை குத்தி ஒடுக்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அசாமில் வசிக்கும் நபர்களைத் தன்னிச்சையாக அந்நி யர்கள் எனப் பிரகடனப்படுத்திய கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள இத்தீர்ப்பு, பாஜக அரசின் ஏஜெண்டுகளாகச் செயல்படும் “அந்நியர் தீர்ப்பாயங்களின்” (For eigners’ Tribunals) அராஜகப் போக்கை அப் பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்டும் மேல்முறையீட்டா ளர்கள் நேரில் ஆஜராகவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் காட்டி, எவ்வித எழுத்துப் பூர்வ ஆதாரங்களையும் பரிசீலிக்காமல் கவு ஹாத்தி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. ஒரு சட்டப்பிரிவின் போர்வையில் அரசு எடுக்கும் எதேச்சதிகார நடவடிக்கை கள் சட்டப்பூர்வமான பாதுகாப்பைக் கோர முடி யாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவித் துள்ளனர். ஒரு நபரை அந்நியராகப் பிரகடனப் படுத்தும் நடைமுறையானது இயந்திரத்தன மாகவும், ஒருதலைப்பட்சமாகவும், எவ்விதப் பகுத்தறிவற்ற முறையிலும் அமைந்தால் அதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

குடியுரிமைப் பறிப்பு என்பது ஒரு மனிதரின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் “கடுமையான சிவில் விளைவுகளை” ஏற்படுத் தக்கூடியது என்பதால், இத்தகைய முடிவுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் உத்தரவாதங்களு க்கு உட்பட்டு, நியாயமான மற்றும் சட்டப்பூர்வ மான முறையில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தங்களின் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கப் போதிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். முந்தைய தவறான தீர்ப்புகளின் தாக்கங்கள் ஏதுமின்றி, இந்த வழக்குகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முற்றிலும் புதிய மற்றும் சுதந்திரமான முறையில் விசாரித்து முடிக்குமாறு தீர்ப்பாயங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் மீது எவ்விதக் கடுமையான அல்லது பழி வாங்கும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளது.

குடியுரிமை என்ற பெயரில் சிறுபான்மையின ரையும் உழைக்கும் ஏழை எளிய மக்களையும் அச்சுறுத்தும் மோடி அரசின் சூழ்ச்சிகளுக்கு எதி ரான இந்தத் தீர்ப்பினை மனித உரிமைப் போராட்டங்களுக்குப் பயன்படுத்துவோம்