ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்!
28 May 2026, 9:58 pm

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்!

புதுதில்லி, மே 28 - பந்தயம் வைத்து விளையாடப் படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பந்தயம் மற்றும் சூதாட்டம் சார்ந்த இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவோ அல்லது தடை செய்யவோ, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை இதன்மூலம் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

திறன்சார்ந்த விளையாட்டுகளாக இருந்தாலும், பந்தயம் கட்டுதலுக்கு அனுமதிக்க முடியாது.

கணிசமான திறன் தேவைப்படும் விளை யாட்டுகள்கூட பொது நலனைப் பாதித்தால், அவை ஒழுங்குபடுத்தப்பட லாம் என நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரி வித்துள்ளது.

பந்தயம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லை என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், இருமாநில அரசுகள் கொண்டுவந்த சட்டங்களை ரத்து செய்திருந்த சென்னை மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளில் அடிமையாகி அதன் மூலம் பணத்தை இழந்து சிலர், தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இதனையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு முதலில் 2020 நவம்பரில் ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

ஆனால், இந்தத் தடை சட்டம் ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறன் சார்ந்த விளையாட்டு களுக்கு பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது.

சென்னை மற்றும் கர்நாடக நீதிமன்றங்கள் இணையவழி ரம்மி, போக்கர் போன்றவற்றின் சட்டபூர்வத்தன்மையை உறுதிசெய்த நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என தற்போது உத்தரவு பிறப்பித்தது.