சுடரும் நீதியும் சூழும் இருளும்
19 May 2026, 9:18 pm

சுடரும் நீதியும் சூழும் இருளும்

சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்ட (உபா) வழக்குகளிலும் ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு என்ற கோட்பாடு பொருந் தும் என்று திங்களன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் உஜ்ஜல் புயான், பி.வி.நாகரத்னா அமர்வு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த சையத் இப்திகார், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறை யில் உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது

அப்போது அரசியல் சாசனத்தின் 21, 22 ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டியே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர். அவர்கள் மேலும், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்க ளில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படும் விகிதம் 1.5 சதவீதம் முதல் 4 சதவீதமாகவே உள்ளது என்றும் 94 முதல் 98 சதவீதம் பேர் விடுவிக்கப்படுவதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தரவுகளை (2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலானவை) குறிப்பிட்டும் உள்ளனர்.

அதுமட்டுமின்றி 2021 ஆம் ஆண்டு உச்சநீதி மன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சூர்ய காந்த், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, கே.ஏ.நஜீப் வழக்கில் அளித்த தீர்ப்பையும் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த அமர்வு அளித்த தீர்ப்பு க்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்றங்கள், உச்சநீதி மன்றத்தின் குறைந்த நீதிபதிகள் கொண்ட அமர்வுகள் கூட அந்தத் தீர்ப்பின் வீரியத்தைக் குறைக்கவோ, அதைத் தவிர்க்கவோ, புறக்க ணிக்கவோ கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

னால் இந்த நிலையில் மறுநாளே தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய், உமர் காலித்தின் 15 நாள் இடைக் கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்கி றார். அத்துடன் நில்லாமல் இந்த வழக்கின் பிற நபர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்ற நிபந்தனைக ளை மீறவில்லை என்றும்; அதற்காக குற்றவாளி எப்போது ஜாமீன் கேட்டாலும் நீதிமன்றம் அதை வழங்க வேண்டும் என அர்த்தமல்ல என்றும் கூறி யிருப்பது நியாயமல்ல. கண்டனத்திற்குரியது.

உடல் நலம் குன்றிய தனது தாயைப் பராமரிக்க வும் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்ளவும் 15 நாள் இடைக்கால ஜாமீன் கோரும் மனுவுக்கான கார ணங்கள், தற்காலிக விடுதலையை நியாயப் படுத்தவில்லை என்று நீதிபதி கூறியிருப்பது முதல்நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நேர் எதிரானது மட்டுமல்ல. அரசியல் சாசனப் பிரிவுகள் 21, 22-க்கு விரோதமானதும் ஆகும். மனி தாபிமான அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்ப டையிலும் நியாயமாக வழங்க வேண்டிய ஜாமீனை உமர் காலித்துக்கு மறுத்திருப்பது நீதியை மறுப்பதாகும்.

உச்சநீதிமன்றத்தின் முதல்நாள் தீர்ப்பு நம்பிக்கையைச் சுடர் விடச் செய்தது என்றால் தில்லி உயர்நீதிமன்றம் மறுநாள் நீதியை இருள் சூழச் செய்திருக்கிறது.