தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போஜ்சாலா மசூதி விவகாரம் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

yesterday
போஜ்சாலா மசூதி விவகாரம் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

போஜ்சாலா மசூதி விவகாரம் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

பாஜக ஆளும் மத்தி யப்பிரதேச மாநிலத் தின் தார் மாவட்டத்தில் உள்ளது போஜ்சாலா-கமல் மவுலா மசூதி. இந்த மசூதி வளாகம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் என்று மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மே 15ஆம் தேதி மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக் களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஹுசைபா அஹ்மதி, வழக்கறிஞர் நிஜாம் பாஷா ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில் கோரிக்கை விடுத்தனர்.

திங்களன்று மனுக்களைப் பரிசீலித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமை யிலான அமர்வு (நீதிபதிகள் ஜோய்மால் யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகி யோர் அடங்கிய அமர்வு), மனுக்களில் உள்ள குறைபாடுகளை நீக்கிவிட்டு மீண்டும் தாக்கல் செய்யுமாறு மனு தாரர்களுக்கு அறிவுறுத்தியது. மேலும், விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உறுதி அளித்தது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.