தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

28 Jan 2026, 2:33 pm
சென்னை விரைவு செய்திகள்

பிரபந்த சர்ச்சை உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு

காஞ்சிபுரம், ஜன.28- காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே 120 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் திவ்ய பிரபந்தம் பாடும் உரிமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த பிரச்சனைக்கு அமைதியான முறை யில் தீர்வு காண முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களைப் பிரதான நடுவராக (மத்தியஸ்தர்) நீதிமன்றம் நியமித்துள்ளது. இக்கோயிலின் வழிபாடு மற்றும் உற்சவங்களின் போது பிரபந்தம் பாடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வரும் நிலையில், இரு தரப்பு வழக்கறிஞர்களின் ஒப்புத லுடன் இந்த நடுவர் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்ததோடு, கோயில் சடங்குகளைத் தடையின்றி நடத்த இரு பிரிவினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியு றுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதி பதியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட நீதிபதி கவுல் மூலம் இந்த நீண்டகாலச் சர்ச்சைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடுகள் இடித்து அகற்றம்

திருத்தணி, ஜன.28- திருத்தணி சாய்பாபா நகரில் நீர் ஓடை மீது கட்டப்பட்டிருந்த சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் மற்றும் கட்டிடங்களை வருவாய்த்துறையினர் செவ்வாயன்று இடித்து அகற்றினர்.

குடியரசு தின விடுமுறை வழங்காத  264 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை, ஜன.28- சென்னையில் குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி தேசிய விடுமுறை வழங்காத 264 நிறுவனங்களுக்குத் தொழி லாளர் துறை அபராதம் விதித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 173 கடைகளில் 123 முரண்பாடுகளும், 183 உணவகங்களில் 141 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டன. தேசிய பண்டிகை விடுமுறை சட்டம் 1958-ன் படி, விடுமுறை நாளில் பணி யாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும். இது குறித்து முன்கூட்டியே தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காத 264 நிறுவனங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனச் சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சு.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நவீன எல்.இ.டி சிக்னல்

செங்கல்பட்டு, ஜன.28- செங்கல்பட்டு நகரின் முக்கிய சந்திப்பான பழைய பேருந்து நிலையம் மற்றும் நான்கு வழிச் சாலை இணையும் பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, நவீன தானியங்கி சிக்னல் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.எஸ்.டி சாலை மற்றும் காஞ்சிபுரம் சாலைகள் இணையும் இப்பகுதியில் காலை, மாலை வேளைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இப்பணியை மேற்கொண்டுள்ளன. தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் சிக்னல் தெளிவாகத் தெரியும் வகையில், உயர்தர எல்.இ.டி  விளக்குகளுடன் கூடிய நவீன கம்பங்கள் போர்க்கால அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன. இப்பணி நிறைவடையும் போது நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி

குடியரசு தின விடுமுறை வழங்காத  264 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சென்னை, ஜன.28- சென்னையில் குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி தேசிய விடுமுறை வழங்காத 264 நிறுவனங்களுக்குத் தொழி லாளர் துறை அபராதம் விதித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 173 கடைகளில் 123 முரண்பாடுகளும், 183 உணவகங்களில் 141 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டன. தேசிய பண்டிகை விடுமுறை சட்டம் 1958-ன் படி, விடுமுறை நாளில் பணி யாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும். இது குறித்து முன்கூட்டியே தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காத 264 நிறுவனங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனச் சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சு.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று தொடங்கும்  ஆசிய கோப்பை சைக்கிள் போட்டி

சென்னை, ஜன. 28- செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் ஜனவரி 29 முதல் 31 வரை நடைபெறவுள்ள ‘ஆசிய கோப்பை 2026’ சைக்கிள் ஓட்டப் போட்டியில் பங்கேற்க மலேசியா, சிங்கப்பூர், கஜகஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து 120-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். இவர்களுடன் 15 தமிழக வீரர்கள் உட்பட மொத்தம் 30 இந்திய வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய வீரர்களுக்குத் தமிழக பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய சைக்கிள் சம்மேளனம் இணைந்து நடத்தும் இப்போட்டியைத் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழனன்று தொடங்கி வைக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.