தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாட்டிறைச்சி தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை!

13 Jul 2026, 11:42 am
மாட்டிறைச்சி தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை!

தமிழகத்தில் பசு மற்றும் கன்றுக்குட்டிகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னதாக, கோவையைச் இந்துமக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சூர்யா தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பக்ரீத் பண்டிகையையொட்டியோ அல்லது வேறு எந்த நாளிலோ தமிழகத்தில் பசு மற்றும் கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், பசு வதை என்பது இஸ்லாமிய மதத்தின் அத்தியாவசிய மதச் சடங்கு அல்ல என்றும் தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக அரசு, மனுதாரர் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் பசு வதையைத் தடுக்கவும், நடைமுறையில் உள்ள சட்டங்களை அமல்படுத்தவும் மட்டுமே கோரியிருந்த நிலையில், உயர்நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி மாநிலம் முழுவதும் பசு வதைக்கு முழுமையான தடை விதித்துள்ளதாக வாதிட்டது.

மேலும், அனுமதிக்கப்பட்ட இறைச்சிக்கூடங்களில் மட்டுமே வதை நடைபெற வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டு, எந்த நாளிலும் பசு அல்லது கன்றுக்குட்டிகளை வதைக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருப்பது, தற்போதைய சட்டங்களுக்கு முரணானது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

விசாரணையின் முடிவில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அமலுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.