தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத ‘நீட்’ முகமை

25 May 2026, 9:00 pm
தவறுகளிலிருந்து பாடம்  கற்றுக்கொள்ளாத ‘நீட்’ முகமை

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத ‘நீட்’ முகமை

புதுதில்லி நீட் வினாத்தாள் கசிவு தொ டர்பாக யுனைடெட் டாக்டர்ஸ் யூனியன் அமைப்பு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி கள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆரதே அடங்கிய அமர்வில் திங்க ளன்று விசாரணைக்கு வந்தது.

மனுவில்,“நீட் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக தேசிய தேர்வு முகமை அமைப்பைக் கலைக்க வேண்டும்; ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் கண்கா ணிப்பில் மறுதேர்வு நடத்த வேண்டும்; நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதற்குப் பதிலாக மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு மாற்றாக ஒரு வலுவான, தன் னாட்சி அமைப்பை உருவாக்க உத்தரவிட வேண்டும்” என வலி யுறுத்தப்பட்டுள்ளது.

மனுதாரர் மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.

ஒன்றிய அரசு, என்டிஏவுக்கு நீதிமன்றம் உத்தரவு

இருதரப்பு வாதத்திற்குப் பின்பு உச்சநீதிமன்ற நீதிபதி கள்,“கடந்த 2024ஆம் ஆண்டு இதே நீட் தொடர்பான வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தேசிய தேர்வு முகமையின் செயல் பாடுகளை சீரமைப்பதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்தின் முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமை யில் குழு அமைக்க ஒன்றிய அர சிற்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் தேசிய தேர்வு முகமை தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

இது வருத்தமளிக்கிறது. அதனால் கடந்த உத்தரவு களைப் பின்பற்றியது குறித்து வரும் வியாழக்கிழமைக்குள் தேசிய தேர்வு முகமை பதில ளிப்பு மனுதாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக யுனைடெட் டாக்டர்ஸ் யூனியன் தாக்கல் செய்த மனு தொடர்பாக ஒன்றிய அரசு, தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்க வேண்டும் “ என உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆரதே அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வழக்குகள் ஒன்றிணைப்பு

யுனைடெட் டாக்டர்ஸ் யூனியன் தொடர்ந்த மனு மீது மட்டுமே திங்களன்று விசாரணை நடை பெற்றது. இந்த மனுவின் அடுத்த கட்ட விசாரணையின் போது நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக அகில இந்திய மருத்துவ சங்கங்க ளின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், தனி நபர்களின் மனுக்கள் ஒன்றாக சேர்த்து விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.