தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கி மோசடி - ஒன்றிய அரசு, சிபிஐ-க்கு நோட்டீஸ்

18 Nov 2025, 12:05 pm
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வங்கி மோசடி - ஒன்றிய அரசு, சிபிஐ-க்கு நோட்டீஸ்
<p>ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனத்தின் வங்கி மோசடிக்கு எதிரான பொதுநல வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு, சிபிஐ, அமலாக்கத் துறை (ED) மற்றும் அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.<br /> ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனத்தின் ரூ.31,580 கோடி வங்கி மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை&nbsp;மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செய்திருந்தார். அந்த மனுவில்,&nbsp;&nbsp;2007&ndash;08 காலப்பகுதியில் தொடங்கியதாகக் கூறப்படும் இந்த மோசடிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் 2025-இல் தான் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடியில் வங்கி ஊழியர்கள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தகவல்கள் எஃப்.ஐ.ஆர்-இல் குறிப்பிடவில்லை. இந்த வழக்கு விசாரணை அறிக்கையை சிபிஐ, அமலாக்கத்துறை வெளியிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு மீதாக விசாரணை&nbsp;இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.&nbsp;&nbsp;<br /> அப்போது, இது குறித்து 3 வாரங்களில் பதிலளிக்க ஒன்றிய அரசு, சிபிஐ, அமலாக்கத் துறை (ED) மற்றும் அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.