தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கைது - தடுப்புக் காவல் இரண்டும் ஒன்றுதான்... ஒருவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்!

5 Nov 2026, 11:35 pm
கைது - தடுப்புக் காவல் இரண்டும் ஒன்றுதான்... ஒருவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்!

கைது - தடுப்புக் காவல் இரண்டும் ஒன்றுதான்... ஒருவரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, நவ. 5 -காவல்துறையானது, ஒருவரைக் கைது செய்த 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தான் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி, காவல்துறையால்காவலில் வைக்கப்பட்டதாகவும், ஆனால், செப்டம்பர் 30-ஆம் தேதி தான் முறையாகக் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டிருந்தார். இந்த வழக்கிலேயே நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ் சந்துர்கர்ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு,மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஒருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் அல்லதுவிடுவிக்கப்பட வேண்டும்.”கைதுக்கும் தடுப்புக் காவலுக்கும் இடையில் ஒரு செயற்கையான வேறுபாட்டை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும், அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம்அளிக்கப்பட்ட அடிப்படைப் பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயலாகவே அமையும்.

ஒருவர் செய்ததாகச் சந்தேகப்பட்டு, கைது செய்யும் அதிகாரியால் அவர் தடுத்துவைக்கப்படும் நொடியிலிருந்து 24 மணிநேரக் காலக்கெடு தொடங்குகிறது. அந்த நொடியே அவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது எனப்தால், சட்டப்பிரிவு 22-இன் உட்பிரிவு (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘கைது மற்றும் தடுப்புக் காவல்’ ஆகியசொற்கள் ஒத்த பொருளுடையவையே” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.தடுப்புக்காவல் 24 மணி நேரத்திற்குள் இருந்தாலும் கூட, அது நியாயமான காலத்தை மீறும் பட்சத்தில், நீதிபதிகள் நீதிமன்றக் காவலை மறுக்கலாம். ஒரு நீதிபதிமுன் ஆஜர்படுத்தப்படாமல் 24 மணி நேரத்திற்கு மேல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டால், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்; நீதிபதி, நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான அவசியமான பயண நேரம்மட்டுமே விலக்களிக்கப்படலாம். எந்தவொரு குடிமகனும் உரிய நீதித்துறை மேற்பார்வை இன்றி நீண்ட காலம் காவலில்வைக்கப்படுவதைத் தடுப்பதே அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 22(2)-ன் பிரதான நோக்கம் என்றும் நீதிபதிகள் தங்களின்தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.