தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

1 Jun 2026, 9:29 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

கணினி மூலம் நீட் தேர்வு உச்சநீதிமன்றம் மறுப்பு

மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வை, வினாத்தாள் கசிவு புகார்களுக்கு மத்தி யில் தேசிய தேர்வு முகமை மே 12 அன்று ரத்து செய்தது. இதற்கான மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த நீட் மறு தேர்வை தற்போதுள்ள பேனா, பேப்பர் (தாள்படிவம்) முறைக்கு பதிலாக கணினி அடிப்படையிலான தேர்வு முறையில் நடத்த, தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக் கோரி ஆர்ஜேடி எம்.பி., சுதாகர் சிங், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் துருவ் சவுகான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்களன்று நீதிபதி கள் பி.எஸ். நரசிம்மா, அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”இதேபோன்ற வழக்குகளை நாங்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய் துள்ளோம். நாம் என்ன மாதிரியான பிரச்ச னைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். தேர்வு ரத்து செய்யப்பட்டு, அது மீண்டும் நடத் தப்படுகிறது. கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள் ளும்” என உத்தரவிட்டது.

“மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம்”

ஒன்றிய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ள தேசிய அள விலான வெப்ப அலை பொது சுகாதார வழிகாட்டுதலில்,”மதியம் 12 மணி முதல் 3மணி வரை கடுமையான வெயில், வெப்ப அலை வீசுவதால், தேவையற்ற வெளிப் பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். மதிய நேரங்களில் வெயிலில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதோ அல்லது கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவதோ கூடாது. மது, தேநீர், காபி, கார்பனேட்டட் குளிர்பானங்கள் அல்லது அதிக சர்க்கரை கொண்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். தாகம் எடுக்கா விட்டாலும் போதிய அளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் கரைசல், எலுமிச்சை பழச் சாறு, மோர், லஸ்ஸி, இளநீர் மற்றும் லேசான உப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறு களைப் பருகலாம்” என அதில் கூறப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.