தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீனாட்சி நடராஜனின் வேட்புமனு ஒத்திவைத்த வழக்கு உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு

12 Jun 2026, 8:31 pm
மீனாட்சி நடராஜனின் வேட்புமனு ஒத்திவைத்த வழக்கு உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு

மீனாட்சி நடராஜனின் வேட்புமனு ஒத்திவைத்த வழக்கு உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18 அன்று தேர்தல் நடைபெறுகிறது. 3 இடங் களுக்கு 174 வாக்குகள் தேவை என்ற நிலையில், பாஜகவிடம் 164 எம்எல்ஏக்கள் உள்ளனர். தன்னிடம் உள்ள வாக்குகளைக் கொண்டு 2 இடங்களை (116 வாக்குகள்) பாஜக எளிதாக வென்றுவிடும்.

அதன்பிறகு பாஜகவிடம் 48 வாக்குகள் மீதமிருக்கும். 3ஆவது இடத்தையும் வெல்ல பாஜகவுக்கு கூடுதலாக 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் 64 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு இடத்தை வெல்லத் தேவையான 58 வாக்குகளை விட 6 வாக்குகள் கூடுதலாகவே உள்ளன. இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரத்தில் இறங்கியதாக, புகார் கிளம்பியது. இதனை தவிர்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு தங்கவைக்கப்பட்டனர்.

வேட்புமனு நிராகரிப்பு

ஆனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவிருந்த மூத்த தலை வர்களில் ஒருவரான மீனாட்சி நட ராஜனின் வேட்புமனு தெலுங்கானா வில் நிலுவையில் உள்ள குற்ற வியல் வழக்கு ஒன்றின் விவரங் களை மறைத்ததாகக் கூறி, திடீ ரென செவ்வாயன்று நிராகரிக்கப் பட்டது. இதற்கு எதிராக போராட் டம் நடத்தியும் பலனில்லை. இத னால் காங்கிரஸ் கட்சி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

மறுப்பு

இந்த வழக்கு வெள்ளியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மீனாட்சி நடராஜன் தரப்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “வேட்புமனு நிராகரிக்கப் பட்டது சட்டப்படி செல்லாது. தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் (Form 26) ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும் என்றால், அதற்கு தகுதியுள்ள நீதி மன்றத்தால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் இந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படவில்லை. இது வெறும் ஒரு தனிநபர் புகார் மட்டுமே. இதன் மீது எந்த நீதிமன்றமும் இதுவரை விசாரணைக்கு உத்தரவிடவில்லை. மேலும், இந்த புகார் கூறப்படும் சம்பவமானது, மீனாட்சி நடராஜன் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எனவே, இதற்கும் அவருக்கும் சட்டப்பூர்வமாக எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், “தேர்தல் நடத்தும் அதிகாரி ஒரு வேட்புமனுவை நிரா கரித்துவிட்டால், பாதிக்கப்பட்ட வேட்பாளருக்கு உள்ள சட்டப் பூர்வமான ஒரே தீர்வு இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகுவதுதான் சரியானது. எனவே, இவ்விவ காரத்தில் நிவாரணம் வழங்க முடியாது. தேர்தல் ஆணையத்தை அணுகலாம்” என வழக்கை முடித்து வைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.