முந்தய பக்கம்

மீரட்டில் 16,726 கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

28 Sept 2026, 10:25 pm
மீரட்டில் 16,726 கட்டடங்களை  இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
<p><strong>மீரட்டில் 16,726 கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு</strong></p><p>புதுதில்லிபாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரின் மண்டலம் ஏ-இல் 16,726 அனுமதியற்ற கட்டடங்கள் மற்றும் நகரின் பிற பகுதிகளில் உள்ள எஞ்சிய சட்டவிரோதக் கட்டுமானங் களை இடிக்கும் பணிகளைத்தொடங்குமாறு மீரட் அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு,</p><p>“முதற்கட்டமாகக் கட்டடங்களில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து அச் செயல்திட்டச் சொத்துகளுக்குப் பூட்டு முத்திரையிட்டு (சீல் வைத்து) இடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இந்த 16,726 கட்டடங்களில், 12,907 குடியிருப்புப் பகுதிகளாகவும், 874 குடியிருப்பு மற்றும் வணிகம் சார்ந்த பகுதிகளாகவும், 2,945 குடியிருப்பு அல்லாத கட்டுமானங்களாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram