சாதிவாரி கணக்கெடுப்பு தவறில்லை உச்சநீதிமன்றம் குட்டு
20 May 2026, 9:06 pm

சாதிவாரி கணக்கெடுப்பு தவறில்லை உச்சநீதிமன்றம் குட்டு

நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகு தியாக, சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்துவது தவறில்லை என உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது. பொதுநலன் என்ற பெயரில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அம்மனுவை தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதி பதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது பேசிய தலைமை நீதிபதி, “நாட்டில் எத்தனை பேர் பின் தங்கியுள்ளனர், எத்தனை பேருக்கு நலத் திட்டங்கள் தேவை என்பதை அர சாங்கம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது அரசின் கொள்கை சார்ந்த விஷயமாகும்” என்று குறிப்பிட்டார் .

மேலும் , 2027 மக்கள் தொகை கணக் கெடுப்பில் சாதி வாரியான கணக்கெ டுப்பு அவசியமாக இடம்பெற வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மா னிப்பது நீதிமன்றத்தின் வரம்பிற்குள் இல்லை .

இந்த விவகாரம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கொள்கை வரம்பிற்குள் வருகிறது என்று கூறிய அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.